'வெந்து தணிந்தது காடு'.. வெளியான சென்னை & செங்கல்பட்டு ஏரியா தியேட்டர் லிஸ்ட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'வெந்து தணிந்தது காடு' படம் ரிலீசாகும் செங்கல்பட்டு மற்றும் சென்னை நகர திரையரங்க விவரங்கள் வெளியாகி உள்ளன.

Advertising
>
Advertising

வெந்து தணிந்தது காடு படம் இன்று செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தினை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் நேரடியாக வெளியிட்டுள்ளது.

தற்போது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தின் செங்கல்பட்டு ஏரியா மற்றும் சென்னை நகர திரையரங்க விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை நகரில் 21 திரையரங்குகளிலும் செங்கல்பட்டு ஏரியாவில் 84 திரையரங்குகளிலும் வெந்து தணிந்தது காடு படம் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு கதாநாயகனாக 'முத்து' எனும் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார். சிம்புக்கு ஜோடியாக  நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார்.

சிம்புவின் அம்மாவாக ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 'வெந்து தணிந்தது காடு’  படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

வெந்து தணிந்தது காடு படத்திற்கு இந்திய அரசின் சென்சார் போர்டு 
U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இந்த திரைப்படம் 2 மணி நேரம் 53 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Silambarasan TR VTK Chennai Chengalpattu Area Theatre List

People looking for online information on GVM, Str, Vendhu Thanindhathu Kaadu, VTK will find this news story useful.