BB ULTIMATE : பிக் பாஸ் மேடையில் 'THUG LIFE' காட்டிய சிம்பு.. வசமாக சிக்கிய போட்டியாளர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் அல்டிமேட் தற்போது 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.

Advertising
>
Advertising

இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான் திடீர் சந்திப்பு எதுக்காக?.. ARR கொடுத்த ஹிண்ட்?

மேலும் கமல்ஹாசன் தொகுத்து வந்த நிகழ்ச்சியை பாதியில் இருந்து, நடிகர் சிலம்பரசன் தொகுத்து வழங்குகிறார்.

கிராமத்து செட்

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில், கடந்த வாரத்தில் கிராமத்து காதாபாத்திரங்கள், பிராது விதிமுறைகள் மற்றும் கிராம செட்அப் என ஒட்டு மொத்த பிக்பாஸ் செட்டும் கிராமத்து பின்னணியில் இருந்தது. இரண்டு குழுவாக பிக்பாஸ் போட்டியாளர்கள் பிரிக்கப்பட, பிக்பாஸ் வீடும் ஏழு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, வேலி போடப்பட்டிருந்தது.

ஊர் கிழவி ஜூலி

இரண்டு அணிகளும் குடும்பங்களாக கருத்தப்பட்டிருந்தது. இதில் ஒரு குடும்பம் சினேகனுடையது. மற்றொன்று, பாலாஜியுடையது. இதில் சினேகனுக்கு மனைவியாக அனிதாவும், பாலாஜியின் மனைவியாக தாமரையும் வருகின்றனர். அனைவருக்கும் ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட, ஊரில் ஒரு கிழவியாக ஜூலி இருந்தார்.

ஜூலி அனிதா சண்டை

கிராமத்து டாஸ்க் அறிவிக்கப்பட்டதும், ஜூலி மற்றும் நிரூப் ஆகியோருக்கு இடையே சண்டை வெடித்தது. இதன் பிறகு, அனிதா மற்றும் ஜூலி ஆகியோர், ஒருவருக்கு ஒருவர் கோபப்பட்டு கொண்டனர். பிராது டாஸ்க்கின் போது, பாலா மற்றும் அனிதா ஆகியோர், மாறி மாறி கருத்துக்களால் மோதிக் கொள்ள, நடுவில் என்ட்ரி கொடுத்த ஜூலி, அனிதாவிடம் கோபத்தில் சில வாக்குகளைத் தெரிவித்திருந்தார்.

ரசிகர்கள் கருத்து

இதுபற்றி பின்னர் சிநேகனிடம் பேசும் அனிதா, "ஜூலியின் இந்த பிராது ஜெயிக்காது, இருப்பினும் நான் இதை என் பற்றிய சில விஷயங்களை தெளிவு படுத்துவதற்காக பயன்படுத்தி கொள்ளலாம்" என பேசியது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. அதே சமயம் அனிதா துல்லியமாகவும் லாஜிக்காகவும் தான் பேசுகிறார், அதையே தான் பாலாஜியும் பண்ணுகிறார், பிறகு ஏன் அனிதாவை மட்டும் விமர்சிக்கிறார்கள்? என்று அனிதா ஆதரவாளர்கள் கேட்டு வருகின்றனர்.

ஜூலிக்கு பாராட்டு

இதனிடையே சில ரசிகர்கள், "ஜூலி பிராது ஜெயிக்காது என்றால், அனிதா தன் சொந்த விஷயத்துக்காக அந்த பிராதை ஜூலியிடம் கேட்டு பயன்படுத்தலாமா?" என்றும் கேட்டுள்ளனர். பிக்பாஸ் வீட்டில், பல முறை கோபமான மற்றும் கிடுக்கிப்பிடி கேள்விகளால், ஜூலியை அனிதா தொடர்ந்து தொந்தரவு செய்கிறார். ஆனால் ஜூலி அவற்றை பொறுமையுடன் கையாண்டு வருவதாக ஜூலியை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

சிம்புவின் ஜாலி கலாய்

இந்நிலையில், வார இறுதியில் வந்த நடிகரும், நிகழ்ச்சி தொகுப்பாளருமான சிம்பு, அனிதா மாற்றி மாற்றி பேசுவதை வைத்து, ஜாலியாக அவரை கலாய்த்திருந்தார். "நீங்க பேசுறது எப்படி தெரியுமா இருக்கு?" என ஆரம்பித்த சிம்பு, அனிதா சம்பத் முன்பு களமிறங்கிய பிக்பாஸ் சீசன் மற்றும் பிக்பாஸ் அல்டிமேட் ஆகியவற்றை இணைத்து முடிச்சு போட்டு பேசுவதாக சிம்பு சிரித்துக் கொண்டே குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பான ப்ரோமோக்கள் அதிகம் வைரலாகி இருந்த நிலையில், எபிசோடின் போதும் அந்த காட்சி, பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி இருந்தது. அனிதாவின் பேச்சால் கிட்டத்தட்ட சிம்பு குழம்பி போனதாகவே தெரிகிறது. அந்த வகையில், அனிதா பற்றி சிம்பு சொன்ன விஷயம் குறித்து, ரசிகர்கள் பல விதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

BIGGBOSS ULTIMATE: போட்டியாளர்களிடம் கடும் கோவப்பட்ட சிம்பு! பரபரப்பான வீடு

தொடர்புடைய இணைப்புகள்

Silambarasan TR viral comments for anitha game BB Ultimate

People looking for online information on BB Ultimate, Bigg Boss Anitha, Bigg Boss Ultimate, Silambarasan TR, Vijay Television will find this news story useful.