சிம்பு நடிக்கும் 'வெந்து தணிந்தது காடு'.. இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா எப்போ? எங்க?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெந்து தணிந்தது காடு படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertising
>
Advertising

Also Read | 'திருச்சிற்றம்பலம்' பார்த்துட்டு இயக்குனர் மாரி செல்வராஜ் செய்த Twitter விமர்சனம்.. செம ட்வீட்!

'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்துள்ளார். முத்து எனும் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார்.

‘வெந்து தணிந்தது காடு’  படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பின் கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான் ஆகிய மூவர் கூட்டணி மீண்டும் மூன்றாம் முறையாக இந்த படத்திற்காக இணைந்துள்ளது.

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக குஜராத்தைச் சேர்ந்த தெலுங்கு நடிகை சித்தி இத்னானி நடிக்கிறார். நடிகை ராதிகா முக்கிய வேடத்தில் சிம்புவின் அம்மாவாக நடிக்கிறார்.

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம், வெந்து தணிந்தது காடு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றியுள்ளது.  இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்து விட்டதாக ஏற்கனவே சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.  நடிகை சித்தி இத்னானியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குனர் கௌதம் மேனன் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து 'வெந்து தணிந்தது காடு' படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்து விட்டதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு நடக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இந்த விழா நடக்கும் என அதிகாரப்பூர்வமாக பிரத்யேக வீடியோ மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ஆடியோ உரிமையை திங்ஃக் மியூசிக் நிறுவனம் ஏற்கனவே கைப்பற்றியுள்ளது.

 

Also Read | தோழிகளுடன் பிரான்ஸ்க்கு டூர் சென்ற நடிகை ஆண்ட்ரியா.. அவரே வெளியிட்ட சூப்பர் PHOTOS!

தொடர்புடைய இணைப்புகள்

Silambarasan TR Venthu Thaninthathu Kaadu Movie Trailer Release Update

People looking for online information on Silambarasan TR, Vendhu Thanindhathu Kaadu, Venthu Thaninthathu Kaadu Movie Trailer will find this news story useful.