'வெந்து தணிந்தது காடு' படத்தின் புதிய THEATRICAL ரிலீஸ் போஸ்டர்.. மரண மாஸ் லுக்கில் சிம்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெந்து தணிந்தது காடு படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | ரசிகர்களுடன் சூரரைப் போற்று படத்த தியேட்டர்ல பார்த்த அனுபவம்.. மனம் திறந்த சுதா கொங்கரா!

சிம்பு நடிப்பில் கடைசியாக வெளிவந்த 'மாநாடு' படம் 117 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.  மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து 'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு நடித்து முடித்துள்ளார்.

‘வெந்து தணிந்தது காடு’  படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பின் கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான் ஆகிய மூவர் கூட்டணி மீண்டும் மூன்றாம் முறையாக இணைந்துள்ளது.

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக குஜராத்தைச் சேர்ந்த தெலுங்கு நடிகை சித்தி இத்னானி நடிக்கிறார். ராதிகா முக்கிய வேடத்தில் சிம்புவின் அம்மாவாக நடிக்கிறார்.

ஏற்கனவே இந்த படத்தின் பல லுக் போஸ்டர்கள் & முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் இன்று படத்தின் ரிலீஸ் தேதி பதித்த திரையரங்க ரிலீஸ் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. நெருப்பு சூழ்ந்த வயலில் சிம்பு கையில் தொரத்தி கம்புடன் ஆக்ரோஷமான தோற்றத்தில் இந்த போஸ்டரில் தோன்றியுள்ளார்.

இந்த படத்தின் ஆடியோ உரிமையை திங்ஃக் மியூசிக் நிறுவனம் ஏற்கனவே கைப்பற்றியுள்ளது.

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம், வெந்து தணிந்தது காடு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றியுள்ளது.

மேலும் இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | துல்கர் நடிக்கும் 'சீதா ராமம்'.. தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்!

தொடர்புடைய இணைப்புகள்

Silambarasan TR Venthu Thaninthathu Kaadu Movie Release Date Poster

People looking for online information on Silambarasan TR, Venthu Thaninthathu Kaadu Movie, Venthu Thaninthathu Kaadu Movie Release Updates will find this news story useful.