ஜன்னல் ஓரத்தில் சோகமாக சிம்பு.. 'வெந்து தணிந்தது காடு' படத்தின் புதிய COUNTDOWN போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'வெந்து தணிந்தது காடு' படத்தின் புதிய ரிலீஸ் கவுண்டவுன் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | Baakiyalakshmi: இனி சிங்கப்பாதை.. கோபி கொடுத்த அவமானங்களால் பாக்யா அதிரடி முடிவு.!

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பின் கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான் ஆகிய மூவர் கூட்டணி மீண்டும் மூன்றாம் முறையாக இந்த படத்திற்காக இணைந்துள்ளது.

'வெந்து தணிந்தது காடு’  படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் இசை & டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு கதாநாயகனாக 'முத்து' எனும் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார்.  சிம்புக்கு ஜோடியாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். சிம்புவின் அம்மாவாக ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

வெந்து தணிந்தது காடு பாகம் ஒன்று (The Kindling) என இந்த படம் தற்போது குறிப்பிடப்படுகிறது.

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம், வெந்து தணிந்தது காடு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றியுள்ளது. 

இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படம் ரிலீசாக இன்னும் 8 நாட்களே உள்ளது. இதனை குறிப்பிடும் வகையில் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜன்னல் ஓரத்தில் சோகமாக சிம்பு அமர்ந்திருக்கும் வகையில் புதிய போஸ்டர் அமைந்துள்ளது.

கௌதம் மேனனுடன் எழுத்தாளர் ஜெயமோகன் இந்த படத்திற்காக முதல் முறையாக இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே நான் கடவுள், அங்காடி தெரு, 2.O, பாபநாசம், சர்கார், இந்தியன்-2, பொன்னியன் செல்வன், விடுதலை உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

கவிஞர் தாமரை பாடலாசிரியராக பணிபுரிகிறார். கலை இயக்குனராக ராஜிவ் நாயரும், உடை வடிவமைப்பாளராக கௌதம் மேனனின் தங்கை உத்தாரா மேனனும் பணிபுரிகின்றனர். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்கிறார்.

Also Read | பிரபல நடிகையுடன் "8 தோட்டாக்கள்" இயக்குனர் திருமணம் .. வைரல் ஃபோட்டோ

தொடர்புடைய இணைப்புகள்

Silambarasan TR Venthu Thaninthathu Kaadu Movie New Countdown Poster

People looking for online information on Silambarasan TR, Venthu Thaninthathu Kaadu, Venthu Thaninthathu Kaadu Movie Countdown Poster will find this news story useful.