சிம்பு நடிக்கும் மாநாடு.. முழுவீச்சில் பட்டையை கிளப்பும் ஷூட்டிங். வைரல் போட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் அடித்து வருகிறது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அண்மையில் வெளியான படத்தின் போஸ்டர்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

இந்நிலையில் தற்போது மாநாடு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் வெங்கட் பிரபு, ஸ்டன்ட் மாஸ்டர் சில்வா ஆகியோர் இருக்கும் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது. 

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் மாநாடு திரைப்படம் நிச்சயம் ரசிகர்களுக்கு ஃபுல் ட்ரீட்டாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

மாநாடு ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் | silambarasan tr venkat prabhu maanaadu shooting spot pics

People looking for online information on Maanaadu, Maanaadu Shooting Spot, Simbu, Str, Venkat Prabhu will find this news story useful.