'வெந்து தணிந்தது காடு' படத்தின் அடுத்த சூடான அப்டேட்.. போஸ்டருடன் வந்த மாஸ் அறிவிப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெந்து தணிந்தது காடு படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். ‘வெந்து தணிந்தது காடு’  படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பின் கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரகுமான் ஆகிய மூவர் கூட்டணி மீண்டும் மூன்றாம் முறையாக இணைந்துள்ளது.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் திருச்செந்தூரில் ஆரம்பமானது. பின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இந்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. பின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து முடிந்தது.

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக குஜராத்தைச் சேர்ந்த தெலுங்கு நடிகை சித்தி இத்னானி நடிக்கிறார். இந்த படத்தின் ஆடியோ உரிமையை திங்ஃக் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் அடுத்த சூடான அப்டேட் நாளை  6:15 மணிக்கு வெளியாகும் என பிரத்யேக போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் பல லுக் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. 

தொடர்புடைய இணைப்புகள்

Silambarasan TR Vendhu Thanindhathu Kaadu Movie Update

People looking for online information on GVM, Silambarasan TR, Simbhu, Str, Venthu Thaninthathu Kaadu, VTK will find this news story useful.