சிம்புவின் அடுத்தடுத்த ப்ராஜக்ட்ஸ்.. தரமான இயக்குநர்களுடன் வரிசைக்கட்டி நிற்கும் படங்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்பு நடிக்கும் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்து முக்கிய தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிம்பு. பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ள இவர், தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. 

இதை தொடர்ந்து சிம்பு வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். கல்யாணி ப்ரியதர்ஷினி, பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இத்திரைப்படம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. 

இதையடுத்து சிம்பு கிருஷ்ணா இயக்கத்தில் பத்துதல படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்துக்கு இசையமைக்கிறார். 

மேலும் சிம்பு இத்திரைப்படங்களை அடுத்து, மீண்டும் சுசீந்திரன் இயக்கவுள்ள திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படம் விரைவில் ஷூட்டிங் முடிக்கப்பட்டு, தீபாவளிக்கு வெளியாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை தொடர்ந்து சிம்பு இயக்குநர் ராம் இயக்கும் திரைப்படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் கௌதம் மேனன் இயக்கும் திரைப்படத்திலும் சிம்பு நடிக்கவுள்ளதாக விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளாராம். 

அடுத்தடுத்து தரமான இயக்குநர்களுடன் வித்தியாசமான கதைக்களங்களோடு கலக்க நடிகர் சிம்பு தயாராக இருப்பதாகவும், அவரின் படங்கள் நிச்சயம் ரசிகர்களுக்கு ஃபுல் ட்ரீட்டாக அமையும் எனவும் கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

சிம்பு நடிக்கும் அடுத்தடுத்த படங்கள் | Silambarasan tr upcoming movies exclusive details

People looking for online information on Eeswaran, Maanaadu, Pathu Thala, Simbu will find this news story useful.