வெந்து தணிந்தது காடு படத்தின் 50வது நாள் வெற்றி விழா நேற்று சென்னையில் நடந்தது.
Also Read | "ரொம்ப பதட்டமா இருக்கேன்".. ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சமந்தாவின் இன்ஸ்டா பதிவு!
வெந்து தணிந்தது காடு படம் கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்த படத்தினை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்தது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை இந்த படம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு கதாநாயகனாக 'முத்து' எனும் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்தார். தென் மாவட்டத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளியாக மும்பைக்கு செல்லும் முத்து வீரனின் (சிம்பு) வாழ்க்கை சம்பவங்களே "வெந்து தணிந்தது காடு" படமாகும்.
'வெந்து தணிந்தது காடு’ படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்தார். இந்த படத்தின் வெற்றிக்கு இயக்குனர் கௌதம் மேனனுக்கு விலையுயர்ந்த பைக்கும், நடிகர் சிம்புவுக்கு டுயோட்டோ காரையும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பரிசாக அளித்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் 50வது நாள் வெற்றி விழா நேற்று ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிம்பு பேசினார். "இந்த காலகட்டம் தமிழ் சினிமாவின் பொற்காலம். சமீபத்தில் வெளியான படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. விக்ரம், பொன்னியின் செல்வன், காந்தாரா, இப்போ லவ் டுடேனு ஒரு படம் வந்திருக்கு. தமிழ் சினிமாவில் உள்ள எல்லா இயக்குனர்களின் கனவையும் நிறைவேற்றும் காலக்கட்டம் இது. வித்தியாசமான படங்களை ரசிகர்கள் ரசிக்கும் நிலைக்கு வந்துள்ளனர். வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியே அதற்கு சாட்சி." என சிம்பு பேசினார்.
Also Read | யுவன் ஷங்கர் ராஜாவுக்கு துபாய் அரசு கொடுத்த மிகப்பெரிய அந்தஸ்து! வைரல் போட்டோஸ்