“சுத்தி எல்லாம் NEGATIVE-ஆ இருக்கு.!” - பட விழாவில் மனம் திறந்த நடிகர் சிலம்பரசன்... வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் உதயநிதியின் மனைவியும் பிரபல இயக்குநருமான கிருத்திகா உதயநிதி.

Advertising
>
Advertising

இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு காதல் நகைச்சுவை திரைப்படமான வணக்கம் சென்னை படம் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார். இந்த படத்தில் மிர்ச்சி சிவா மற்றும் பிரியா ஆனந்த், சந்தானம் ஆகியோர் நடித்தனர். அனிருத் இசையமைப்பில் இந்த படத்தின் பாடல்கள் ஹிட் அடித்தன.

அதன் பின்னர் கிருத்திகா உதயநிதி, விஜய் ஆண்டனி நடிப்பில் காளி படத்தை இயக்கினார். இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது. காளி திரைப்படத்தை  ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்க, நாயகன் விஜய் ஆண்டனியே இசை அமைத்திருந்தார்.

இந்நிலையில் தான் கிருத்திகா உதயநிதி, தற்போது பேப்பர் ராக்கெட் என்கிற வெப் சீரிஸ் மூலம் டிஜிட்டலிலும் எண்ட்ரி கொடுத்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், தன்யா ரவிச்சந்திரன், கௌரி கிஷன், பூர்ணிமா பாக்கியராஜ், கருணாகரன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜீ 5 ஓடிடி தளத்தில் வரும் ஜூலை 29-ஆம் தேதி இந்த தொடர் நேரடியாக திரையிடப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் சிம்பு, “பேப்பர் ராக்கெட் திரைப்படம் தொடர்பாக கிருத்திகா உதயநிதிக்கு வாழ்த்துக்கள். அவருடைய டைட்டில் அனைத்துமே அழகாக இருக்கிறது. அவருடன் நான் ஒரு படம் பண்ணுவதற்காக பேச்சுவார்த்தை நடந்தது. எனக்கு லேடி இயக்குனர், இயக்குனர் என்று பாகுபாடு கிடையாது. எல்லாருமே டைரக்டர்கள் தான். அவர்கள் ஏற்கனவே வந்து விட்டார். அவர்களுக்கு உண்டான இடத்தை நாம் கொடுக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக அவர்களுக்கு இருக்கிறது.

அந்த சமயத்தில் நான் கிருத்திகாவுடன் படம் பண்ணுவதாக பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருந்தது. அந்த நேரத்தில் பழகும் போது பொழுதுபோக்கிற்காக படம் பண்ணுகிறாரா.. இல்லை சீரியஸாக படம் பண்ணுகிறாரா . என்கிற சந்தேகம் இருந்தது . ஆனால் பழகும் போது தான் தெரிந்தது. அவர் அவ்வளவு மெனக்கட்டு படம் பண்ணினார். எனக்கு பெருமையாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.

ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் நிறைய நெகட்டிவிட்டி நம்மைச் சுற்றி இருக்கின்றன. நெகட்டிவான விஷயங்களை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கிறார்கள். எல்லா இடத்திலும் பார்க்க முடிகிறது. நானும் சொல்லி இருக்கிறேன். அந்த சூழலில் பாசிட்டிவிட்டியை முன்னுக்கு கொண்டு வரக்கூடிய விஷயங்களை பார்க்கும்பொழுது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

பேப்பர் ராக்கெட்டில் பாசிட்டிவான விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. பட குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், நன்றி.” என்று உருக்கமாக பேசினார்.

“சுத்தி எல்லாம் NEGATIVE-ஆ இருக்கு.!” - பட விழாவில் மனம் திறந்த நடிகர் சிலம்பரசன்... வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Silambarasan TR speech in Paper rocket press meet

People looking for online information on Kiruthiga Udhayanidhhi, Paper rocket, Silambarasan TR will find this news story useful.