பத்து தல படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவலை படத்தின் தயாரிப்பாளர் சார்பில் படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Also Read | தயாரிப்பாளரான இளம் நடிகை.. மேடையில உடைந்து அழுகை.! ஓடிவந்த சாய் பல்லவி.!!
கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக 'பத்து தல' படம் உருவாகிறது.
2017 ஆம் ஆண்டு நியோ நோயர் வகைமையில் உருவான இந்த படம் கன்னட சினிமாவில் மிக முக்கிய அந்தஸ்தை பெற்றது. நிழல் உலக தாதாவை தேடிப்போகும் ரகசிய போலிஸ் பற்றிய கதை தான் இந்த படம். சிவராஜ் குமார் நடித்த படங்களில் அதிக வசூல் செய்த படம் இது தான்.
ஸ்டூடியோ கிரீன் K. E ஞானவேல் ராஜா தயாரிப்பில், சில்லுனு ஒரு காதல் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்புவும், கௌதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கும் இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் எடிட்டராக தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் K L பணிபுரிகிறார். கொரோனா காரணமாக பத்து தல படத்தின் படப்பிடிப்பு தாமதமான நிலையில், 26.08.2021 அன்று இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.
முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் துவங்கியது. மூன்றாம் கட்ட் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்தது.
பின்னர் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்த்த பொழுது சிம்புவின் தந்தையும் நடிகருமான டி. ராஜேந்தர் உடல்நலக்குறைவு காரணமாக மேல் சிகிச்சைக்காக லண்டன் செல்லும் சூழல் உருவானது. இதனால் பத்து தல படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது. டி. ராஜேந்தர் குணமாகி தற்போது அமெரிக்காவில் உள்ளார்.
இந்நிலையில் பத்து தல படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்று படத்தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் சிம்பு- இயக்குனர் கிருஷ்ணா இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
இப்படத்தின் முன்னோட்டம் சிம்பு பிறந்தநாளுக்கு வெளியானது. இந்த படம் வரும் டிசம்பர் 14 அன்று ரிலீசாக உள்ளது.
Also Read | PS1: "தமிழன்.. தமிழன்னு சொல்லிக்கிறோம்.. அப்படி என்ன நாம பெரியாள்னா தெரியாது!" - கார்த்தி பேச்சு!