சிம்பு நடிக்கும் 'பத்து தல'.. படத்தில் வில்லனாக பிரபல முன்னணி இயக்குனரா? சூப்பர் COMBO-ல இது!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்பு & கௌதம் கார்த்திக் நடிக்கும் 'பத்து தல' படத்தின் வில்லன் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | PONNIYIN SELVAN: 'தஞ்சைக்கு யார் வர்றீங்க?' .. ஆதித்த கரிகாலனின் ட்வீட்.. ஜாலியாக பதிலளித்த 'PS1' நடிகர்கள்!

மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை தொடர்ந்து, நடிகர் சிம்பு அடுத்ததாக கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக 'பத்து தல' படம் உருவாகிறது.

2017 ஆம் ஆண்டு நியோ நோயர் வகைமையில் உருவான இந்த படம் கன்னட சினிமாவில் மிக முக்கிய அந்தஸ்தை பெற்றது. நிழல் உலக தாதாவை தேடிப்போகும் ரகசிய போலிஸ் பற்றிய கதை தான் இந்த படம். சிவராஜ் குமார் நடித்த படங்களில் அதிக வசூல் செய்த படம் இது தான்.

இந்த திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் கௌதம் மேனன், பத்து தல படத்தில் சிம்புவுக்கு வில்லனாக நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீஸை ஒட்டி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வுகளில் இயக்குனர் கௌதம் மேனன் கலந்து கொண்டார். அப்போது இந்த தகவலை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

ஸ்டுடியோ கிரீன், K. E. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் எடிட்டராக தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் K L பணிபுரிகிறார்.

பத்து தல படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்திருந்த நிலையில், இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்திலும், மூன்றாவது கட்டப்படிப்பு கன்னியாகுமரியில் நடந்திருந்தது. நான்காம் கட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி பகுதியில் நடந்தது.  இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் கோவிலூரில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

பத்து தல திரைப்படம் இந்த ஆண்டு, டிசம்பர் 14 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | VIDEO: விக்ரம் நடிக்கும் "துருவ நட்சத்திரம்".. ரிலீஸ் எப்போ? கௌதம் மேனன் கொடுத்த தெறி அப்டேட்.!

சிம்பு நடிக்கும் 'பத்து தல'.. படத்தில் வில்லனாக பிரபல முன்னணி இயக்குனரா? சூப்பர் COMBO-ல இது! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Silambarasan TR Pathu Thala Movie Villain Gautham Vasudev Menon

People looking for online information on Gautham Vasudev Menon, Pathu Thala Movie, Silambarasan TR will find this news story useful.