சிம்பு & கௌதம் கார்த்திக் நடிக்கும் 'பத்து தல' படத்தின் படப்பிடிப்பு தகவல் வெளியாகி உள்ளது.
Also Read | இந்தியா முழுவதும் ஹிட் அடித்த "காந்தாரா'.. OTT ரிலீஸ் எப்போ? எதுல?
மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை தொடர்ந்து, நடிகர் சிம்பு அடுத்ததாக கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக 'பத்து தல' படம் உருவாகிறது.
நிழல் உலக தாதாவை தேடிப்போகும் ரகசிய போலிஸ் பற்றிய கதை தான் இந்த படம். இந்த திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன், இயக்குனர் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ஸ்டுடியோ கிரீன், K. E. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் எடிட்டராக தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் K L பணிபுரிகிறார்.
பத்து தல படத்தின் ஆரம்ப படப்பிடிப்பு விசாகப்பட்டினத்திலும், கன்னியாகுமரியிலும் நடந்திருந்தது. நான்காம் கட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி பகுதியில் நடந்தது. இந்த படத்தின் 5ஆம் கட்ட படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் கோவிலூரில் நடந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள துங்கபத்திரை அணையில் நடந்தது. இந்த படத்தின் தற்போதைய படப்பிடிப்பு ஐத்ராபாத் நகரில் நடந்தது.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது என சிலம்பரசன் தனது டிவிட்டர் பக்கத்தில் படக்குழுவினருடன் கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த கடைசி நாள் படப்பிடிப்பில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் தளத்தில் இருந்துள்ளார்.
Also Read | நடிகர் அஜித்குமார் - சிவகார்த்திகேயன் சந்திப்பு.. இணையத்தை கலக்கும் வைரல் ஃபோட்டோ!