’பத்துதல’ படத்தின் ’நம்ம சத்தம்’ பாடல்.. சிம்புவின் தெறிக்கும் டான்ஸ் GLIMPSE வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிலம்பரசன் TR.

Advertising
>
Advertising

                    Images are subject to © copyright to their respective owners.

Also Read | வெளியூர் கிளம்பிய இன்ஸ்டா பிரபலம் அமலா ஷாஜி .. தளபதி 67 படத்துக்காகவா? வைரலாகும் Fans கமெண்ட்..

கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான 'மாநாடு' திரைப்படம், 100 கோடிக்கும் மேல்  வசூலித்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தில் உடல் எடையை குறைத்து புதிய தோற்றத்தில் சிம்பு நடித்திருந்தார்.

மாநாட்டை தொடர்ந்து, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிம்பு நடித்த "வெந்து தணிந்தது காடு" திரைப்படம், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

Images are subject to © copyright to their respective owners.

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை தொடர்ந்து, நடிகர் சிம்பு அடுத்ததாக கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

ஸ்டுடியோ கிரீன், K. E. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மார்ச் மாதம் 30 ஆம் தேதி பத்து தல படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

நாளை பிப்‌.3 அன்று மதியம் 12:07 மணிக்கு  பத்து தல படத்தின் 'நம்ம சத்தம்' எனும் முதல் சிங்கிள் பாடல் சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது. இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். சாண்டி மாஸ்டர் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார். தற்போது சிம்புவின் அசத்தலான நடன அசைவுகளோடு இந்த பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.

Also Read | Vijay Antony : உடல்நிலை குறித்த தகவலுடன் பிச்சைக்காரன் -2 அப்டேட் கொடுத்த விஜய் ஆண்டனி!

தொடர்புடைய இணைப்புகள்

Silambarasan TR Pathu Thala Movie Namma Satham Glimpse Video

People looking for online information on Namma Satham Glimpse Video, Pathu Thala, Silambarasan TR will find this news story useful.