சிம்பு நடிப்பில் அடுத்த திரைப்படம்.. 'நாளைக்கு ஒரு செம சம்பவம் இருக்கு..!!' - படக்குழு சர்ப்ரைஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்பு நடிக்கும் திரைப்படம் குறித்து படக்குழுவினர் ஒரு செம மாஸ்-ஆன அப்டேட்டை கொடுத்துள்ளனர். 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக கலக்கி வருபவர் நடிகர் சிம்பு. இவர் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்துள்ளார். நிதி அகர்வால், பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். பொங்கலுக்கு இத்திரைப்படம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இதை தொடர்ந்து சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் வெளியான மாநாடு படத்தின் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

இந்நிலையில் சிம்புவின் அடுத்த திரைப்படம் குறித்து ஒரு செம மாஸ்-ஆன தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கின்றனர். சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இப்படத்தை இயக்கவுள்ளார். கன்னடத்தில் வெளியான மஃப்டி படத்தின் ரீமேக் இது எனவும் கூறப்படுகிறது. 

நாளை (டிசம்பர் 24) இத்திரைப்படத்தின் டைட்டில் லான்ச் நடைபெறும் எனவும் படக்குழுவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஃபாஸ்டில் சிம்புவின் படங்கள் குறித்து அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

சிம்பு படத்தின் டைட்டில் லுக் அறிவிப்பு | Silambarasan tr next film title launch details announced

People looking for online information on Gautham Karthik, KE Gnanavel Raja - Studio Green, Simbu will find this news story useful.