ஆஹா.. இதை பார்த்தா சிம்பு ரசிகர்கள் மெர்சலாயிடுவாங்க! வைரலாகும் மாஸ் ஸ்டில்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மும்பை: வெந்து தணிந்தது காடு படத்தின் புதிய சிம்பு ஸ்டில் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

வீடு தேடி வந்து வலிமை விநியோகஸ்தர் சொன்ன நல்ல விஷயம்.. பூரித்துப் போய் வரவேற்ற போனி கபூர்

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். ‘வெந்து தணிந்தது காடு’  படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். 

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பின் கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரகுமான் ஆகிய மூவர் கூட்டணி மீண்டும் மூன்றாம் முறையாக இணைந்துள்ளது.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் திருச்செந்தூரில் ஆரம்பமானது. பின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இந்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் முழுவீச்சில் நடந்து வந்தது.

இந்த படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு இன்று (09.02.2022) முதல் ,மும்பையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளை விட அதிகம் சொல்லும் என இந்த புகைப்படத்திற்கு கேப்சன் எழுதி படப்பிடிப்பு தளத்தில் எடுத்த தனது BTS புகைப்படத்தை கௌதம் மேனன் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் சிம்புவும் தன் பங்கிற்கு படத்தின் புதிய ஸ்டில்லை வெளியிட்டுள்ளார். அதில் ராயல் என்பீல்ட் பைக்கில் செம மாஸாக சிம்பு காட்சியளிக்கிறார். 

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக குஜராத்தைச் சேர்ந்த தெலுங்கு நடிகை சித்தி இத்னானி நடிப்பதாக  சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது, இதனை பிரத்யேக போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்தது. ஏற்கனவே இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. சிம்பு பிறந்தநாளுக்கு இந்த படத்தின் புதிய போஸ்டர் வெளியானது.

வெந்து தணிந்தது காடு படத்திற்காக களமிறங்கிய கௌதம் மேனன்! அவரே வெளியிட்ட வைரல் BTS புகைப்படம்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Silambarasan TR New Still photo from Venthu Thaninthathu Kaadu

People looking for online information on சிம்பு, BTS, Silambarasan TR, Str, Venthu Thaninthathu Kaadu will find this news story useful.