"நாயகன் மீண்டும் வாரார்".. அசர வைக்கும் புதிய லுக்கில் சிம்பு.. தெறிக்கவிடும் போட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிம்புவின் புதிய லுக் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக பரவி வருகின்றன.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | எதிர்நீச்சல் சீரியலில் பட்டையை கிளப்பும் கனிகா.. இவர்தான் அவங்க கணவரா.?

மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு அடுத்ததாக கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தில் நடித்துள்ளார்.

கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக 'பத்து தல' படம் உருவாகிறது.

இந்த திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன், இயக்குனர் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

ஸ்டுடியோ கிரீன், K. E. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் எடிட்டராக தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் K L பணிபுரிகிறார்.

Images are subject to © copyright to their respective owners.

தற்போது இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மார்ச் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, மார்ச் மாதம் 18ஆம் தேதி மாலை 5 மணி முதல் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் நடிகர் சிம்பு, தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புதிய லுக் போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கருப்பு நிற உடையில் நீண்ட முடியுடன் கையில் டிராலி சூட்கேஸ் உடன் சிம்பு காணப்படுகிறார்.

Images are subject to © copyright to their respective owners.

சிம்பு அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தினை கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்க உள்ளது.  கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இந்த படத்தினை இயக்க உள்ளார்.

Also Read | "கல்யாணம் பண்ணிக்கலாமா?".. ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்த ஸ்ருதிஹாசன்..!

தொடர்புடைய இணைப்புகள்

Silambarasan TR New Look Images went viral on social media

People looking for online information on Silambarasan TR, Silambarasan TR New Look will find this news story useful.