சிம்பு நடிக்கும் TIME LOOP மாநாடு! தமிழ் சினிமாவின் TENET! ஹாலிவுட் லெவலில் அசத்தலான டிரெய்லர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த 2021 ஆம் வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கும் திரைப்படங்களில் ஒன்று மாநாடு.

நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்த இந்த திரைப்படம் எப்பொழுது திரைக்கு வரும் என சினிமா ரசிகர்களும், சிம்பு ரசிகர்களும் காத்து இருந்தனர்.  'மாநாடு' திரைப்படம் வருகிற தீபாவளிக்கு நவம்பர் 4 அன்று வெளியாகும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இவர்களுடன் எஸ்.ஜே. சூர்யா, எஸ். ஏ. சந்திரசேகர், பிரேம் ஜி அமரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் எடிட்டிங்கை பிரவின் K.L கையாள்கிறார். வெங்கட் பிரபு இயக்குகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். 

இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த படத்தின் போஸ்டர், டீசர் முன்னோட்டம், முதல் சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் டிரெய்லர் இன்று அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நான்கு மொழிகளில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்திருந்தார். 

அதன்படி படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  Time Loop கான்செப்ட்டில் உருவாகும் முதல் தமிழ் படம் மாநாடு ஆகும். கிறிஸ்டோபர் நோலனின் டெனட் படம் பற்றிய வசனத்தையும் இடம் பெறச் செய்தது, அசத்தலான வெங்கட்பிரபு டச். 

மாநாடு படத்தின் டிரெய்லர் கீழே உள்ளது.

சிம்பு நடிக்கும் TIME LOOP மாநாடு! தமிழ் சினிமாவின் TENET! ஹாலிவுட் லெவலில் அசத்தலான டிரெய்லர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Silambarasan tr maanaadu movie trailer released went viral

People looking for online information on Silambarasan TR, Suresh Kamathchi, Venkat Prabhu, Yuvan Shankar Raja will find this news story useful.