27, பிப்ரவரி, 2022: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி+ ஹாட் ஸ்டார் ஓடிடியில் நடக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான முந்தைய 5 சீசன் பிரபலங்கள் இந்த அல்டிமேட் சீசனில் இணைந்துள்ளனர்.

கமல் விலகல்..
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் கடந்த வாரங்களில் வெளியிட்ட அறிக்கையில், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி என்பது டிஸ்னி+ஹாட் ஸ்டார் முன்னெடுத்த டிஜிட்டல் புரட்சி அதன் முன்னெடுப்பில் தானும் பங்கு வகித்திருந்தது பெருமையாக கருதுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் நடிக்கும் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கொரோனாவால் தள்ளிப் போனதுடன் இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியுடன் அந்த தேதி க்ளாஷ் ஆவதால், தான் விக்ரம் படப்பணிகளை முடித்துக் கொடுத்தாக வேண்டிய சூழல் உண்டானதாகவும் தெரிவித்திருந்தார்.
பிக்பாஸ் சீசன் 6-ல் சந்திக்கலாம்
குறிப்பாக நடிகர் கமல்ஹாசன், விக்ரம் படத்தில் நடிக்கும் இதர முக்கிய நடிகர்களின் தேதிகள், அவர்கள் ஒப்புக்கொண்ட பணிகள் உள்ளிட்டவை பாதிக்கப்பட கூடாது என்பதாலும் இந்த முடிவை எடுத்ததாகவும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் இருந்து விலகுவது வருத்தம் அளிப்பதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் பிக்பாஸ் சீசன் 6-ல் சந்திப்பதாகவுன் கமல் கூறியிருந்தார்.
தொகுத்து வழங்க இருக்கும் சிம்பு
இந்த நிலையில்தான் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை இளம் நடிகர் சிம்பு தொகுத்து வழங்கவிருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கென சிம்பு பங்கேற்ற முதல் ப்ரோமோ ஏற்கனவே வெளியாகியிருந்தது. தற்போது வார இறுதியில் ஹவுஸ்மேட்ஸை சந்தித்து சிம்பு பேசவிருக்கும் நிகழ்ச்சிகள் நடக்கத் தொடங்கிவிட்டன. இது தொடர்பான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
ஆரம்பிக்கலாமா?
இந்த ப்ரோமோவில் சிம்பு தோன்றியவுடனேயே இளம் ரசிகர்களுள் ஒரு பெண் ரசிகை சுத்திப் போட்டு நெட்டி முறிக்கிறார். அப்போது பேசும் சிம்பு, “வந்தாச்சு... செலிபிரேஷன் ஆரம்பிக்கலாமா? டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் 24 மணி நேரமும் பிக்பாஸ் அல்டிமெட்” என்று சொல்கிறார். சிம்பு பேசப்போகும் விஷயங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என தெரிகிறது.
Also Read: சாத்தான் ஸ்லேவா இருப்பாரோ.. பைக்கில் வந்து அம்மன் தாலியை அடித்துச் சென்ற மர்ம நபர்!