சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன்.. ட்ரெய்லர் ரிலீஸ் ஆவது எப்போது.?? 100% உறுதி தகவல் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் தேதி குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்துள்ளார். தமன் இசையமைத்துள்ள இப்படத்தில் நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, பாரதிராஜா ஆகியோர் நடித்துள்ளனர். 

ஈஸ்வரன் படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்துள்ள நிலையில், ஈஸ்வரன் ட்ரெய்லர் வெளியாகும் தேதி குறித்து முக்கிய தகவல் தெரிய வந்துள்ளது. வரும் சனிக்கிழமை 9-ஆம் தேதி அன்று ஈஸ்வரன் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளதாம். 

மேலும் இந்த ட்ரெய்லர் 2 நிமிடம் 11 நொடிகளுக்கு உருவாக்கப்பட்டிருப்பதாகவும் விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொங்கலுக்கு வெளியாகவுள்ள ஈஸ்வரன் படத்தின் மீது எதிர்ப்பார்ப்பை எகிற வைக்கும் அளவுக்கு இந்த ட்ரெய்லர் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. 

 

Tags : Simbu, Eeswaran

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

சிம்புவின் ஈஸ்வரன் பட ட்ரெய்லர் தகவல் | Silambarasan tr eeswaran trailer exclusive release date details

People looking for online information on Eeswaran, Simbu will find this news story useful.