சிம்பு பிறந்த நாள்: புதிய போஸ்டருடன் வெந்து தணிந்தது காடு படக்குழு கொடுத்த பக்கா ட்ரீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: நடிகர் சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு வெந்து தணிந்தது காடு படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

BREAKING: ஜோதிகாவின் அடுத்த படத்தை இயக்குகிறாரா பிரபல பெண் இயக்குனர்? முழு தகவல்

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களின் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர். ரகுமான், சிம்பு மற்றும் கௌதம் மேனன் ஆகிய மூவர் கூட்டணி அடுத்து இணையும் படத்திற்கு ‘வெந்து தணிந்தது காடு’ என பெயரிடப்பட்டது.இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

கவிஞர் தாமரை பாடலாசிரியராக ஒப்பந்தமாகியுள்ளார். கலை இயக்குனராக ராஜிவ் நாயரும், உடை வடிவமைப்பாளராக கௌதம் மேனனின் தங்கை உத்தாரா மேனனும் பணிபுரிகின்றனர். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் திருச்செந்தூரில் ஆரம்பமானது. பின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.

இந்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் முழுவீச்சில் நடந்து வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சிம்பு,கௌதம் மேனன் ஆகியோர் நடிகை ராதிகாவுடன் எடுத்த BTS புகைப்படத்தை படத்தின் தயாரிப்பாளர் பகிர்ந்து இருந்தார்.

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக குஜராத்தைச் சேர்ந்த தெலுங்கு நடிகை சித்தி இத்னானி நடிப்பதாக  சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது, இதனை பிரத்யேக போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்தது. ஏற்கனவே இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் சிம்பு பிறந்தநாளுக்கு புதி போஸ்டர் வெளியாகி உள்ளது.

கௌதம் மேனனுடன் எழுத்தாளர் ஜெயமோகன் இந்த படத்திற்காக முதல் முறையாக இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே நான் கடவுள், அங்காடி தெரு, 2.O, பாபநாசம், சர்கார், இந்தியன்-2, பொன்னியன் செல்வன், விடுதலை உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இவரின் அக்னி குஞ்சொன்று கண்டேன் எனும் சிறுகதையே இப்போது வெந்து தணிந்தது காடு என படமாக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

தூத்துகுடியில் இருந்து கொத்தடிமையாக மும்பை செல்லும் தமிழ் இளைஞனுக்கு நடக்கும் சம்பவங்களே கதைக்களமாக இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. இந்த படத்தின் Glimpse வீடியோ Journey of Muthu என்ற பெயரில் ஏற்கனவே ரிலீசாகியுள்ளது. இந்த படத்தின் ஆடியோ உரிமையை திங்ஃக் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

'பத்து தல' படத்தின் புதிய போஸ்டருடன் வெளியான கொல மாஸான GLIMPSE வீடியோ! STR Fans-க்கு பெர்த் டே ட்ரீட்

தொடர்புடைய இணைப்புகள்

Silambarasan TR Birthday Venthu Thnaninthathu Kaadu New Poster

People looking for online information on ஏ.ஆர். ரகுமான், கௌதம் மேனன், சிம்பு, சிம்பு பிறந்தநாள், மூவர் கூட்டணி, வெந்து தணிந்தது காடு, Siddhi Idnani, Silambarasan TR, Silambarasan TR Birthday, Simbhu Birthday, Venthu Thaninthathu Kaadu will find this news story useful.