அஜித் வீட்டிற்கு வந்து துக்கம் விசாரித்த சிறுத்தை சிவா, சிம்பு, அனிருத்.. வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான வலம் வருபவர் நடிகர் அஜித்குமார்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "பெற்றோர் மீது பேரன்பு கொண்டவர் AK".. அஜித் தந்தையின் மறைவுக்கு விக்னேஷ் சிவன் இரங்கல்!   

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி துணிவு திரைப்படம் வெளிவந்தது.

துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. துணிவு படம் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. மேலும் தியேட்டரை தொடர்ந்து ஓடிடி தளத்திலும் துணிவு படம் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.

நடிகர் அஜித்குமார் அடுத்ததாக லைக்கா நிறுவனம் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்ரமணியம் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை சென்னையில் நடிகர் அஜித் குமார் இல்லத்தில்  காலமானார். அவருடைய மறைவுக்கு தமிழக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், சசிகலா, விஜயபாஸ்கர், விஜய் வசந்த், நடிகர் ஜி எம் சுந்தர், நடிகை சாக்ஷி அகர்வால், நடிகர் சிவா ஆகியோர் அறிக்கை வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளனர்.  அஜித்குமார் தந்தையார் பி.எஸ்.மணியின் இறுதி சடங்கு பெசண்ட் நகர் மின்மயானத்தில் நடைபெற்றது. 

Images are subject to © copyright to their respective owners.

இறுதிச் சடங்கில் நடிகர் அஜித் குமார், நடிகை ஷாலினி அஜித்குமார், நடிகர் ரிச்சர்ட் ரிஷி, நடிகர் சிவா உள்ளிட்ட அஜித்குமாரின் உறவினர்கள் கலந்து கொண்டனர். மேலும் சுரேஷ் சந்திரா, அனு வர்தன், மருத்துவர் விஜய் ஷங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் நடிகர் சிலம்பரசன், இயக்குனர் சிறுத்தை சிவா, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் நடிகர் அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் வந்து துக்கம் விசாரித்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. பத்து தல படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்ற நிலையில் சிலம்பரசன் நிகழ்வை தொடர்ந்து அஜித்குமார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

Also Read | சோழப் பேரரசின் சிம்மாசனத்துக்கான போர்.. PS2 படத்தின் டிரெய்லர் ரிலீஸ் எப்போ? செம்ம தகவல்

அஜித் வீட்டிற்கு வந்து துக்கம் விசாரித்த சிறுத்தை சிவா, சிம்பு, அனிருத்.. வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Silambarasan TR Anirudh Siruthai Siva Visit AjithKumar House

People looking for online information on Ajith Kumar, Ajith Kumar Father PS Mani Funeral, Anirudh, Silambarasan TR, Siruthai Siva will find this news story useful.