தமிழ் சினிமாவில் முக்கிய முதன்மை நடிகர்களுள் ஒருவர் சிம்பு. பிப்ரவரி 3-ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடும் சிம்பு, உறவை காத்த கிளி திரைப்படம் மூலம் 1984 ஆம் ஆண்டு திரையில் தோன்றினார்.
Also Read | K. VISWANATH : கே.விஸ்வநாத் மறைவு.. இளையராஜா இரங்கல் வீடியோ.. “மறக்க முடியாத காம்போ” ரசிகர்கள் உருக்கம்..
ஐ அம் எ லிட்டில் ஸ்டார் என்று என்ட்ரி பாடலுடன் வந்த சிம்புவுக்கு ஒரு வலுவான தளத்தை அமைத்துக் கொடுத்தார் அவரது தந்தை இயக்குநர் டி.ராஜேந்தர்.
பின்னர் காதல் அழிவதில்லை, தம், அலை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த சிம்பு, சிலம்பரசன் என்கிற இயற்பெயருடன் தமிழில் அறிமுகமானாலும் பின்னாலில் சிம்பு என்றும் சிலம்பரசன் டி.ஆர் என்றும் ரசிகர்களால் அழைக்கப்பட்டார். தற்போது எஸ் டி ஆர் என்ற புனைப்பெயருடன் ரசிகர்களால் சிம்பு அழைக்கப்பட்டு வருகிறார்.
சிம்புவை ஆல்ரவுண்டர் என்று நிச்சயமாக சொல்லலாம். ஏனென்றால் திரைத்துறையில் நடிப்பு என்கிற வட்டத்துக்குள் மட்டும் சிம்பு நின்றுவிடவில்லை. கதையாசிரியர், இசையமைப்பாளர், எழுத்தாளர், பாடலாசிரியர், பாடகர், பின்னணி குரல் கலைஞர் என பன்முக திறன் கொண்டவராக சிம்பு வலம் வருகிறார்.
அண்மையில் வாரிசு படத்தில் விஜய்க்கு தீ தளபதி பாடல் பாடிய சிம்பு, இப்படி பிற நடிகர்களின் படங்களில் பின்னணி பாடகராக பாடல்களை பாடியுள்ளார். தவிர பிற நடிகர்களின் படங்களில் பின்னணி குரல் கொடுத்தார். நடிகர் சந்தானம் நடித்த சக்க போடு போடு ராஜா திரைப்படத்துக்கு சிம்பு தான் இசையமைப்பாளர். 2004 ஆம் ஆண்டு மன்மதன் படத்தை இயக்கிய சிம்பு அதன் பிறகு வல்லவன் என்கிற திரைப்படத்தை இயக்கினார்.
சிம்புவின் நடிப்பிலான மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா, தொட்டி ஜெயா, மாநாடு மற்றும் அண்மையில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட திரைப்படங்கள் சிம்புவின் ரசிகர்களின் ஃபேவரைட் திரைப்படங்கள் என்று சொல்ல முடியும். அத்துடன் சிம்பு சந்தித்த பிரச்சினைகளும் சர்ச்சைகளும் கூட ஏராளம் தான். அவற்றை கடந்து வந்த சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்தில், ‘பிரச்சனை எனக்கு பாயாசம்.. என் பேச்சில் இல்லை பொய் வேஷம்’ என இடம் பெற்ற பாடல் வரிகள் அவருடைய ரசிகர்கள் மத்தியில் வைரலானது.
ஜல்லிக்கட்டு உள்ளிட்ட மக்கள் போராட்டங்களிலும் கலந்து கொண்ட சிம்பு பல்வேறு சமயங்களில் தன்னுடைய கருத்துகளையும் பதிவு செய்திருக்கிறார். இடையே உடல் பருமனான சிம்பு உடல் எடையை குறைத்த அட் மேன் என்கிற வீடியோ வெளியாகி ரசிகர்களை புல்லரிக்க வைத்தது. அதன் தொடர்ச்சியாக வியக்க வைக்கும் கதை திரைக்கதையுடன் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு, முற்றிலும் மாறுபட்ட கதைக் களத்தில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்கள் சிம்புவின் அண்மை கால வெற்றி படங்களாக அடுத்தடுத்து அமைந்தன.
இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு அவருடைய ரசிகர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை உரித்தாக்கி வருகின்றனர்.
Also Read | King of Kotha : அடிபொலி.!! பண்டிகையில் ரிலீஸ் ஆகும் துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’..