'மாநாடு' படம் பெரிய வெற்றி அடைய இவங்க தான் காரணம்! நடிகர் சிம்பு நெகிழ்ச்சியான அறிக்கை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாநாடு படம் வியாழன் அன்று (25.11.2021) உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபல விமர்சகர்கள் படத்தை பார்த்துவிட்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி, சிவகார்த்திகேயன் ஆகியோர் படத்தை பாராட்டியிருந்தனர். வியாழக்கிழமை வெளியான இந்த படம் முதல் இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டும் 14 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிகாரப்பூர்வமாக டிவிட்டரில் அறிவித்தார்.

இயக்குனர் வெங்கட்பிரபு டிவிட்டரில் டிவீட் செய்து, மாநாடு படம் 4 நாளில் தமிழகமெங்கும் அனைத்து  வினியோகஸ்தர்களுக்கும், கேரளா-கர்நாடகாவில் 3 வது நாளில் அனைத்து  வினியோகஸ்தர்களுக்கும் லாபமாகி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் படத்தின் வெற்றி குறித்து சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் "இறைவன் மீதும் உழைப்பின் மீதும் நம்பிக்கை வைத்து மிக அழகாக உழைத்த படம் "மாநாடு" எப்படியாவது என்னை நேசிப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்திவிட வேண்டும் என்ற என் எண்ணத்திற்கு ஏற்ற பலன் கிடைத்துள்ளது.. "மாநாடு" படம் உலகம் முழுக்க மிகப் பெரும் வெற்றியை அள்ளியெடுத்துள்ளது.

இதற்குக் காரணமான என் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, அற்புதமான இயக்கத்தை தந்த வெங்கட் பிரபு. அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்கள். மாநாடு படக்குழு என் தாய், தந்தை வெளியிட்ட விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், திரையுலக நண்பர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள். என் இரத்தமான அன்பு ரசிகர்களுக்கும். உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் மிகப் பெரிய நன்றிக் கடன்பட்டுள்ளேன்.

நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் என் அத்தனை உணர்வுகளையும் அடக்கிவிட முடியாது. ஆனால் பதிலுக்குத் தெரிவிக்க வேறு வார்த்தைகள் இல்லையே... ஆடியோ விழாவில் நான் சிந்திய சிறு துளிகளைத் தரையில் விழவிடாமல் தாங்கிக் கொண்ட உங்கள் அன்பிற்குள் நான் அடங்கி மகிழ்கிறேன். வெறியோடு உலகம் முழுக்க வெற்றியைத் தேடித் தந்திருக்கிறீர்கள். அனைவருக்கும் வணக்கங்களும், வாழ்த்துகளும்! அன்புடன் உங்கள் சிலம்பரசன் TR! என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Silambarasan TR about Maanaadu Movie Blockbuster Success

People looking for online information on Maanaadu, Silambarasan TR will find this news story useful.