வாரே.. வா.. சிம்புவின் 'மாநாடு' ட்ரெய்லர் ரிலீஸ் பற்றிய 'செம்ம' அப்டேட்!.. 'தீயாய்' பரவும் தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு,  கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு.

நீண்ட எதிர்பார்ப்புக்கு பின்னர் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வரும் ஜூன் 21 வெளியாகும் என இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருந்தனர்.

அந்த காத்திருப்புக்கு தகுந்த பதில் தற்போது கிடைத்துள்ளது. ஆம், வரும் ஜூலை 21-ஆம் தேதி, அதாவது பக்ரீத் பண்டிகையையொட்டி மாநாடு படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கலாம் என தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை ட்விட்டர் ஸ்பேஸ் ஆடியோ சாட் தளத்தில் இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பகிர்ந்துள்ளார் என்றும் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிகிறது.

முன்னதாக கடந்த ஜூன் 12-ஆம் தேதி தான் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படம் டிஸ்னி+ஹாட் ஸாடார் ஓடிடியில் ஒளிபரப்பாகத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: அப்டி போடு!! ஆர்யாவின் அடுத்த 2 படங்கள் பற்றிய மாஸ் அப்டேட்.. அதுலேயும் இந்த படம் அடுத்த பார்ட் வருதா?

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Silambarasan maanaadu trailer update here is what we know

People looking for online information on Maanaadu, Silambarasan TR, Suresh Kamakshi, Venkat Prabhu, Yuvan Shankar Raja will find this news story useful.