முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படம்.. அடடா இவங்க தான் ஹீரோயினா.. வெளியான செம்ம தகவல்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் புதிய படத்தில் கதாநாயாகியாக சிதி இத்னானி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

சசிகுமார் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி இருந்த குட்டிப்புலி திரைப்படம் மூலம், இயக்குனராக அறிமுகம் ஆனவர் முத்தையா. இதன் பிறகு, கார்த்தியை வைத்து 'கொம்பன்' திரைப்படத்தை இயக்கி இருந்த முத்தையா, தொடர்ந்து விஷாலை வைத்து 'மருது' உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கி உள்ளார். கார்த்தி - முத்தையா கூட்டணியில் வெளியான விருமன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், முத்தையா நடிகர் ஆர்யாவுடன் புதிய படத்தில் இணைவதாக தகவல்கள் வெளியாகியது.

நடிகர் ஆர்யா, டெடி மற்றும் சார்ப்பட்டா பரம்பரை படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, சக்தி சௌந்தர் ராஜன் உடன் "கேப்டன்" படம் மூலமாக மீண்டும் கைகோர்த்தார். இந்த திரைப்படத்தை Think Studios நிறுவனம்,  நடிகர் ஆர்யாவின் The Show People நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருந்தது. இப்படத்தில் ஆர்யாவுடன் சிம்ரன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

ஆர்யாவை வைத்து முத்தையா படம் இயக்குவதாக தகவல்கள் வெளியாகிவந்த நிலையில் இந்த படத்தில் சிதி இத்னானி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. கடந்த 15 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்த வெந்து தணிந்தது காடு படத்திலும் சிதி இத்னானி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக, முத்தையா இயக்கும் படங்கள் அனைத்திலும், கிராமம் சார்ந்த கதைக் களம் தான் இடம்பெற்றிருக்கும். 'அவன் இவன்' உள்ளிட்ட ஒருசில கிராமத்து பின்னணி கொண்ட படங்களில் நடித்திருக்கும் ஆர்யா, தற்போது முத்தையாவுடன் கைகோர்த்திருப்பதால் ரசிகர்களிடையே ஆவல் அதிகரித்திருக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் கதாநாயகியாக சிதி இத்னானி ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருப்பது, ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்திருக்கிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Sidhi idhani roped as female lead for Arya Muthiya project

People looking for online information on Arya, Muthiya, Sidhi idhani will find this news story useful.