விமர்சையாக நடந்த சித்தார்த் - கியாரா திருமணம்.. ட்ரெண்ட் ஆகும் ஃபோட்டோஸ்.. KIARA SIDHARTH WEDDING

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட்டில் பிரபல நடிகராக இருப்பவர் சித்தார்த் மல்ஹோத்ரா. இவர் ஏக் வில்லன், ஷேர்ஷா, மிசன் மஜ்னு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் சித்தார்த் பிரபலம் அடைந்தவர்.

Image Credit : Kiara Advani Twitter

Advertising
>
Advertising

இதே போல, தோனி படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் அடைந்தவர் நடிகை கியாரா அத்வானி. இதனைத் தொடர்ந்து கபீர் சிங், குட் நியூஸ், ஷேர்ஷா உள்ளிட்ட பல படங்களிலும் கியாரா அத்வானி நடித்துள்ளார்.

தொடர்ந்து, பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் இன்னும் பெயரிடப்படாத "RC 15" என்ற குறிப்பிடப்பட்டுள்ள திரைப்படத்திலும் கியாரா நடித்து வருகிறார். ராம் சரண் இந்த திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை கியாரா ஆகியோர் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வந்தது. முன்னதாக, அவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும் தகவல் தெரிவிக்கும் நிலையில், கடந்த சில தினங்களாக அவர்கள் திருமணம் குறித்த தகவல்கள் தான் இணையத்தை அதிகம் ஆக்கிரமித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா திருமணம், பிப்ரவரி 07 ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகி இருந்தது. மேலும் இந்த திருமணத்தில் இந்திய சினிமாவின் பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது. அதே போல, சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி திருமணத்தில் விருந்தினர்களுக்கு கொடுக்கப்படும் உணவு வகைகள் பற்றிய தகவல்கள் கூட அதிகம் வைரலாகி இருந்தது.

Image Credit : Kiara Advani Twitter

இந்த நிலையில், தற்போது கியாரா மற்றும் சித்தார்த் ஆகியோரின் திருமணம் நடந்து முடிந்துள்ளது. தங்களின் திருமண புகைப்படங்களை சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் நடிகை கியாரா அத்வானி ஆகியோர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இருவரும் திருமண கோலத்தில் புன்னகை கலந்து இருக்கும் இந்த புகைப்படங்கள், ரசிகர்களின் வாழ்த்துக்களையும் பெற்று வருகிறது. தனது கேப்ஷனில், "எங்களின் முன்னோக்கிய பயணத்தில் உங்களின் அன்பினையும் ஆசீர்வாதங்களையும் வேண்டுகிறோம் ❤️🙏" என கியாரா அத்வானி குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும், சமந்தா, பூமி பட்னேகர் உள்ளிட்ட பல திரை பிரபலங்களும் சித்தார்த் - கியாரா ஜோடிக்கு தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Sidharth Malhotra and Kiara Advani marriage pics gone viral

People looking for online information on Kiara Advani, Marriage, Sidharth Malhotra will find this news story useful.