வெந்து தணிந்தது காடு படத்தில் இந்த இளம் நடிகையுடன் ஜோடி சேரும் சிம்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களின் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர். ரகுமான், சிம்பு மற்றும் கௌதம் மேனன் ஆகிய மூவர் கூட்டணி அடுத்து இணையும் படத்திற்கு ‘வெந்து தணிந்தது காடு’ என பெயரிடப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

ஜெயமோகன்

கௌதம் மேனனுடன் எழுத்தாளர் ஜெயமோகன் இந்த படத்திற்காக முதல் முறையாக இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே நான் கடவுள், அங்காடி தெரு, 2.O, பாபநாசம், சர்கார், இந்தியன்-2, பொன்னியன் செல்வன், விடுதலை உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இவரின் அக்னி குஞ்சொன்று கண்டேன் எனும் சிறுகதையே இப்போது வெந்து தணிந்தது காடு என படமாக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. தூத்துகுடியில் இருந்து கொத்தடிமையாக மும்பை செல்லும் தமிழ் இளைஞனுக்கு நடக்கும் சம்பவங்களே கதைக்களமாக இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.


பாரதி கேட்ட அந்த கேள்வி.. ஆடிப்போன வெண்பா.. பாரதி கண்ணம்மாவில் புதிய திருப்பம்!

சித்தி இத்னானி

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். மாநாடு படத்தை தொடர்ந்து சிம்பு இந்த படத்தில் நடிக்கிறார். கவிஞர் தாமரை பாடலாசிரியராக ஒப்பந்தமாகியுள்ளார். கலை இயக்குனராக ராஜிவ் நாயரும், உடை வடிவமைப்பாளராக கௌதம் மேனனின் தங்கை உத்தாரா மேனனும் பணிபுரிகின்றனர்.

சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்கிறார்.  சிம்புவுக்கு ஜோடி யார் என்பது மட்டும் இன்னும் அறிவிக்கப்படாமல் இருந்தது. தற்போது படக்குழு ஒரு அறிவிப்பை வெளியிட்டு இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக குஜராத்தைச் சேர்ந்த தெலுங்கு நடிகை சித்தி இத்னானி நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனை பிரத்தியேக போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது.

“சப்புனு அறையணும்.. கோவம் வருது!”.. எப்பவும் கூலாக இருக்கும் ராஜூ பாயா இது? என்ன நடந்தது?

படப்பிடிப்பு

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் திருச்செந்தூரில் ஆரம்பமானது. பின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இந்நிலையில் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் முழுவீச்சில் நடந்து வருகிறது. ஏற்கனவே முகநூலில் நடிகர் சிம்புவும்,கௌதம் மேனனும் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தை  பகிர்ந்துள்ளனர்.

இந்த படத்தின் ஆடியோ உரிமையை திங்ஃக் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஆடியோ உரிமை நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை  படதயாரிப்பு நிறுவனம் சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக போஸ்டர் மூலம் அறிவித்துள்ளனர். இந்த படத்தின் Glimpse வீடியோ Journey of Muthu என்ற பெயரில் ஏற்கனவே ரிலீசாகியுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Siddhi Idnani onboard in Venthu Thaninthathu Kaadu

People looking for online information on ஏ.ஆர். ரகுமான், கௌதம் மேனன், சிம்பு, மூவர் கூட்டணி, வெந்து தணிந்தது காடு, Siddhi Idnani, Silambarasan TR, Venthu Thaninthathu Kaadu will find this news story useful.