முதல்ல சிம்பு, அடுத்து ஹரிஷ் கல்யாண்... அடுத்தடுத்து இரண்டு படத்தில் கமிட் ஆன இளம் நடிகை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: சிம்பு படத்தில் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சித்தி இத்னானி அடுத்த படத்தில் கமிட் ஆகி உள்ளார். 

Siddhi Idnani Joind with Harish Kalyan for a new movie
Advertising
>
Advertising

குஜராத்தைச் சேர்ந்த தெலுங்கு நடிகை சித்தி இத்னானி, சிம்பு - கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகும் வெந்து தணிந்தது காடு படத்தில்  நடிப்பதாக சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை பிரத்தியேக போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரில் சிம்புவுடன் அமர்ந்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. 

Siddhi Idnani Joind with Harish Kalyan for a new movie

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் திருச்செந்தூரில் ஆரம்பமானது. பின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இந்நிலையில் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் முழுவீச்சில் நடந்து வருகிறது.

இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். மாநாடு படத்தை தொடர்ந்து சிம்பு இந்த படத்தில் நடிக்கிறார். கவிஞர் தாமரை பாடலாசிரியராக ஒப்பந்தமாகியுள்ளார். கலை இயக்குனராக ராஜிவ் நாயரும், உடை வடிவமைப்பாளராக கௌதம் மேனனின் தங்கை உத்தாரா மேனனும் பணிபுரிகின்றனர்.

இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே நடிகை சித்தி இத்னானி புதிய படத்தில் ஹரிஷ் கல்யானுக்கு ஜோடியாக நடிக்கிறார்.  இந்த படத்தை பூ, பிச்சைக்காரன் படங்களை இயக்கிய இயக்குனர் சசி இந்த காதல் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்மையில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் எடுத்த BTS புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்துள்ளனர். 

தொடர்புடைய இணைப்புகள்

Siddhi Idnani Joind with Harish Kalyan for a new movie

People looking for online information on ஏ.ஆர். ரகுமான், கௌதம் மேனன், சிம்பு, மூவர் கூட்டணி, வெந்து தணிந்தது காடு, Harish Kalyan, Poo Sasi, Sasi, Siddhi Idnani, Silambarasan TR, Venthu Thaninthathu Kaadu will find this news story useful.