"வெந்து தணிந்தது காடு படம் பார்த்த பிறகு சிம்பு FAN ஆகிட்டேன்" - சித்தி இத்னானி EXCLUSIVE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு கதாநாயகனாக 'முத்து' எனும் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார்.

Advertising
>
Advertising

Also Read | சிம்பு நடிக்கும் 'வெந்து தணிந்தது காடு'..தெலுங்குல இதான் பேரா? ஆஹா இதுவும் செமயா இருக்கே!

சிம்புக்கு ஜோடியாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். சிம்புவின் அம்மாவாக ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் நடித்துள்ள நடிகை சித்தி இத்னானி நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அந்த பேட்டியில், "வெந்து தணிந்தது காடு படத்தினை பார்த்த பிறகு சிம்புவின் ரசிகையாக மாறிவிட்டேன். இந்த படத்தில் சிம்புவின் உடல் மொழி, உருமாற்றம், சிம்புவின் நடை, அவருடைய தோள்பட்டை கூட அபாரமாக நடித்துள்ளது. முத்து கதாபாத்திரம் இதயத்தை நொறுக்கும் தன்மை கொண்டது" என்று சித்தி இத்னானி கூறியுள்ளார்.

கௌதம் மேனனுடன் எழுத்தாளர் ஜெயமோகன் இந்த படத்திற்காக முதல் முறையாக இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே நான் கடவுள், அங்காடி தெரு, 2.O, பாபநாசம், சர்கார், இந்தியன்-2, பொன்னியன் செல்வன், விடுதலை உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

கவிஞர் தாமரை பாடலாசிரியராக பணிபுரிகிறார். கலை இயக்குனராக ராஜிவ் நாயரும், உடை வடிவமைப்பாளராக கௌதம் மேனனின் தங்கை உத்தாரா மேனனும் பணிபுரிகின்றனர். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்கிறார்.

'வெந்து தணிந்தது காடு’  படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இந்த படத்தின் இசை & டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | 'வெந்து தணிந்தது காடு' கேரளா ரிலீஸ் உரிமம்.. கைப்பற்றிய 'விக்ரம்' வினியோகஸ்தர்! போடு வெடிய

"வெந்து தணிந்தது காடு படம் பார்த்த பிறகு சிம்பு FAN ஆகிட்டேன்" - சித்தி இத்னானி EXCLUSIVE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Siddhi Idnani Exclusive Interview about Silambarasan TR Venthu Thaninthathu Kaadu

People looking for online information on AR Rahman, Siddhi Idnani, Siddhi Idnani Exclusive Interview, Silambarasan TR, Venthu Thaninthathu Kaadu will find this news story useful.