ஐதராபாத்: சாய்னா நேவாலை பாலியல் ரீதியாக திட்டிய விவகாரத்தில் பிரபல நடிகர் சித்தார்த் மீது ஹைதராபாத் போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஜனவரி 5 அன்று பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெரோஸ்பூருக்கு பிரதமர் மோடி சென்றார். அப்போது போராட்டக்காரர்கள் பிரதமர் மோடி செல்லும் வழியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு குறைபாடு காரணமாக பஞ்சாப் சுற்றுப் பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு பிரதமர் மோடி டெல்லி திரும்பினார். இதனால் பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக கடும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் பாஜக ஆதரவு தளத்தில் இருந்து குவிந்தன.
பிரதமர் மோடிக்கு ஆதரவாக We Stand With Modi எனும் டிவிட்டர் ஹேஸ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டது. இந்த டிவிட்டர் ஹேஸ்டேக் டிரெண்டில் பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் கலந்து கொண்டார். அதில் ''ஒரு நாட்டின் பிரதமரின் பாதுகாப்பில் குறைபாடு இருந்தால், எந்த ஒரு நாடும் பாதுகாப்பாக இருந்துவிட முடியாது, பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வலுவாக கண்டிக்கிறேன்''. என பதிவிட்டு தனது கண்டனத்தை பதிவு செய்தார்.
"5வது படிக்குறப்பவே ரஜினி படத்துக்கு SONG எழுதுனேன்"..துல்கர் சல்மான பட இயக்குநர் நெகிழ்ச்சி!
சாய்னா நேவாலின் ட்வீட்டிற்கு பதில் கருத்தாக நடிகர் சித்தார்த், சாய்னா நேவாலின் பேட்மிட்டன் (இறகு பந்து) விளையாட்டினை இணைத்து இழிவுபடுத்தும் வகையில் (06.01.2022) அன்று பதிலளித்திருந்தார். இந்த டிவீட்டிற்கு பல தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் வந்தன. சித்தார்த் மீது வழக்கு பதிவு செய்யவும் தேசிய மகளிர் ஆணையம், மகாராஷ்டிர காவல்துறை டி ஜி பி க்கு கடிதம் அனுப்பியது. இதைத்தொடர்ந்து நடிகர் சித்தார்த் மீண்டும் (10.01.2022) அன்று "தான் கூறிய பதில் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக" டிவீட் செய்து இருந்தார்.
சாய்னாவின் கணவர் பருபள்ளி காஷ்யப், சித்தார்த் டிவீட் குறித்து திங்களன்று ஒரு ட்வீட்டில் சித்தார்த்தை டேக் செய்து, பதில் அளித்துள்ளார். அதில், "இது எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது, உங்கள் கருத்தை வெளிப்படுத்துங்கள், ஆனால் சிறந்த வார்த்தைகளைத் தேர்ந்தெடுங்கள். இப்படிச் சொல்வது அருமையாக இருந்தது என்று நீங்கள் நினைத்தீர்கள், எனில் #notcool #ddigraceful". என ட்வீட் செய்தார்.
மன்னிப்பு கேட்டும் தீராத சர்ச்சை: களத்துல இறங்கிய தமிழக போலிஸ் DGP! விசாரனையில் சித்தார்த்?
சித்தார்த்தின் டிவீட்டிற்கு சாய்னாவின் தந்தை ஹர்வீர் சிங் நேவால் பிரபல செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்து இருந்தார். அதில் ""என் மகள் நாட்டுக்கு பதக்கங்கள் பெற்று தந்தார்! நீங்க என்ன செய்தீங்க சித்தார்த்.?" என கேள்வி எழுப்பினார், மேலும் "என் மகளுக்கு சித்தார்த் அப்படிப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தியபோது நான் மிகவும் மோசமாக உணர்ந்தேன். இந்தியா ஒரு சிறந்த சமூகம் என்று நான் எப்போதும் நம்புகிறேன், பத்திரிகையாளர்கள் மற்றும் விளையாட்டு துறை சகோதரத்துவத்தின் ஆதரவு சாய்னாவுக்கு எப்போதும் உள்ளது. மன்னிப்பு கேட்பது தான் சித்தார்த் செய்ய வேண்டிய அடிப்படை செயல்". என கூறி இருந்தார்.
பின் , கண்டனங்கள் பெரிதாவதை உணர்ந்த சித்தார்த், டிவிட்டரில் ஒரு அறிக்கை விட்டு சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கோரினார். அதில் "நான் எழுதிய பதிலில் இருந்த RUDE ஜோக்கிற்காக மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். எனது வார்த்தை விளையாட்டானது, எந்தவித தீய நோக்கம் கொண்டதில்லை. ஒரு பெண்ணாக இருப்பதால் தான், உங்களை தாக்க வேண்டும் என்ற நோக்கம் நிச்சயமாக எனக்கு ஏற்படவில்லை என்றும், நீங்கள் என் கடிதத்தை ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன் என்றும், நீங்கள் எப்போதும் என் சாம்பியன் தான்" என்று சித்தார்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இந்த மன்னிப்பை சாய்னா நேவாலும் ஏற்றுகொண்டார்.
இந்நிலையில் சித்தார்த்தின் டிவீட் குறித்து ஹைத்ராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது பற்றி அதிகாரப்பூர்வமாக ஹைத்ராபாத் சைபர் கிரைம் கூடுதல் DCP கே வி எம் பிரசாத் அறிவித்துள்ளார். அதில் " பிரேனா எனும் பெண், சித்தார்த் மீது சைபர் கிரைம் போலீசிடம் புகார் அளித்துள்ளதாகவும், அதன் படி சித்தார்த் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டம் 509 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 67 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணை நடத்தப்பட்டு, சித்தார்த்துக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று கூடுதல் டிசிபி பிரசாத் தெரிவித்துள்ளார்.