மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக இருந்து இயக்குனர் ஷங்கர் மூலம் 'பாய்ஸ்' படத்தில் நாயகனாக அறிமுகமானவர் சித்தார்த். அதன் பிறகு தெலுங்கிலும் பல படங்களில் நடித்தார். அதில் 'நூவொஸ்தாவன்டே நேநொத்தன்டானா, பொம்மரிலு,' உள்ளிட்ட சில படங்கள் அவருக்கு பெரிய பெயரைப் பெற்றுத் தந்தன.
