பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்.
இதற்கு எதிர்கட்சிகள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றனர். மேலும் திரையுலகினரும் தங்கள் எதிர்ப்புகளை தங்களது சமூக வலைதளப்பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். அவை தற்போது விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, நடிகர் சித்தார்த், ''எடப்பாடி பழனிசாமி என்னுடைய மாநிலத்தையும், மக்களையும் represent செய்வது வெட்கமாக இருக்கிறது. குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை ஆதரிப்பது அவரது உண்மையான சுயரூபத்தையும் நேர்மையற்ற தன்மையையும் காட்டுகிறது. அதற்காக நீங்கள் பொறுப்பேற்கப்படுவீர்கள். அதுவரை உங்கள் தற்காலிக பவரை அனுபவியுங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ''ஜெயலலிதா Citizenshiip Amendment Bill-ஐ ஒரு போதும் ஆதரித்ததில்லை. அவர் இல்லாத அதிமுக அரசுஅதிமுக பண்பாட்டை மீறியுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.