ANDHAGAN SINGLE: பிரசாந்த்தின் 'அந்தகன்'.. சித் ஸ்ரீராம் குரலில் “என் காதல்”.. இணையத்தில் தெறி ஹிட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் அந்தகன் படத்தின் முதல் சிங்கிள் பாடலான என் காதல் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Advertising
>
Advertising

அந்தாதூனும் அந்தகனும்

நடிகர் பிரசாந்த் நடிப்பில் 'அந்தகன்' என பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தை அவரின் தந்தை தியாகராஜன் தயாரித்து இயக்குகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு, இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில், ஆயூஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் பாலிவுட்டில் 'அந்தாதூன்' திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்ற அந்தாதூன் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் ‘அந்தகன்’ படம். இந்த படத்தில் நடிகர் ‘நவரச நாயகன்’ கார்த்திக் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தில், பிரசாந்த்துடன் பிரியா ஆனந்த், சிம்ரன், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிகுமார், மனோபாலா நடிக்கின்றனர். இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக ரவியாதவ், கலை இயக்குநராக செந்தில் ராகவன் ஆகியோர் பணிபுரிகிறார்கள். படத்துக்கு தமிழின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்டதாகவும், படத்தின் டப்பிங், பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது.

கலைப்புலி S தாணு

இந்நிலையில் இந்த படத்தின் தியேட்டர் ரிலீஸ் உரிமையை கலைப்புலி S தாணுவின் V கிரியேஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இதற்கான அறிவிப்பை படக்குழு  சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. அதன்படி இந்த படம் விரைவில் தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றி உள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் நடிக்கும் படம் வெளியாக உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

வெளியான முதல் சிங்கிள்

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு  முன்னர் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள என் காதலும் என்னாகுமோ என்கிற முதல் சிங்கிள் பாடல் இணையத்தில் வெளியானது. பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இந்த பாடலை முன்னணி பாடகரான சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். இந்த பாடல் வெளியானது முதல் ரசிகர்களின் கவனத்தைப் பரவலாக பெற்று வருகிறது.  

சமீபகாலமாக பாடகர் சித் ஸ்ரீராம் பாடும் பாடல்கள் தொடர்ந்து ஹிட்டாகி வருகின்றன. விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற “கண்ணான கண்ணே”, சைக்கோ படத்தில் இடம்பெற்ற “உன்ன நெனச்சு” சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் இடம்பெற்ற “ஸ்ரீவள்ளி” ஆகிய பாடல்கள் மொழியைத் தாண்டி ஹிட் அடித்தன. அந்த வரிசையில் இப்போது அந்தகன் பாடலான “என் காதலும்” இணைந்துள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

2.2 மில்லியன் வியூஸ்…

இந்த பாடல், தற்போது வரை இணையத்தில் 2.2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. சந்தோஷ் நாராயணின் இசையும் சித் ஸ்ரீராமின் குரலும் இந்த பாடலை ரசிக்க வைக்கும் பாடலாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

Sid Sriram En Kadhal Song andhagan hit viral internet

People looking for online information on Andhagan, Prashanth, Priya Anand, Santhosh Narayanan, Sid Sriram, Simran will find this news story useful.