சிபிராஜ் நடிப்பில் பிரபல OTT-யில் நேரடியாக வெளியாகும் 'வட்டம்'.. வெளியான சூப்பர் டிரெய்லர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு & எஸ்.ஆர்.பிரபு  தயாரிப்பில், நடிகர் சிபிராஜ் நடித்துள்ள “வட்டம்”, படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | பொன்னியின் செல்வன் படத்தின் சிங்கிள் பாடல் எப்போ ரிலீஸ்? A.R. ரஹ்மான் வெளியிட்ட சூப்பர் VIDEO!

இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில்,  எஸ்ஆர் பிரகாஷ் பாபு மற்றும் எஸ்ஆர் பிரபு ஆகியோர் தயாரித்துள்ளனர்.

‘வட்டம்’ ஒரு திரில்லர் திரைப்படம். மனோ, ராமானுஜம், கௌதம் மற்றும் பாரு ஆகிய கதாப்பாத்திரங்கள் 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து சந்திக்கும் பிரச்சனைகளும், பரபரப்பான சம்பவங்களும் தான் கதை.

இந்த தொடர் சம்பவங்கள், அவர்களின் வாழ்க்கையையும், வாழ்க்கையைப் பற்றிய பார்வையையும் மொத்தமாக மாற்றுகிறது.

சிபி ராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா மற்றும் அதுல்யா கதாநாயகியாக நடித்துள்ளனர். இன்று இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. த்ரில்லர் வகைமை படங்களுக்கான தன்மையில் டிரெய்லர் அமைந்துள்ளது.

இதற்கான விழா சென்னையில் நடந்தது. சிபி ராஜ், ஆண்ட்ரியா மற்றும் படக்குழுவினர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சமீபத்தில் நயன்தாராவின் O2 & கமல்ஹாசனின் விக்ரமுக்கு கிடைத்த அபரிதமான வரவேற்பைத் தொடர்ந்து, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த வெளியீடாக  சிபிராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கும் 'வட்டம்' படத்தினை நேரடி திரைப்படமாக வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

Also Read | அருள்நிதி நடிப்பில் வெளிவந்த புதிய த்ரில்லர் திரைப்படம்.. பிரபல OTT-யில் ரிலீஸா? எப்போ?

சிபிராஜ் நடிப்பில் பிரபல OTT-யில் நேரடியாக வெளியாகும் 'வட்டம்'.. வெளியான சூப்பர் டிரெய்லர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sibi Raj Andrea Jeremiah Athulya Ravi Vattam Movie Trailer

People looking for online information on Andrea Jeremiah, Athulya Ravi, Sibiraj, Vattam Movie, Vattam Movie Trailer will find this news story useful.