மாறுபட்ட வேடத்தில் நானி! தேவதாசியாக சாய் பல்லவி! எதிர்பார்ப்பை எகிற வைத்த SSR படத்தின் TRAILER VIDEO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நானி, சாய்பல்லவி, கீர்த்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன் நடிப்பில் உருவாகி வரும் படம் #SSR 'ஷியாம் ஷிங்கா ராய்'. 

Advertising
>
Advertising

'ஷ்யாம் ஷிங்கா ராய்' படத்தை ராகுல் சாங்கிருத்தியன் இயக்குகிறார். விஸ்வரூபம் படத்தின் ஒளிப்பதிவாளர் சானு வர்கீஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் மிக்கி ஜே மேயர் இசையமைக்கிறார். தேசிய விருதுப்பெற்ற 'ஜெர்சி' பட எடிட்டர் நவீன் நூலி படத்தொகுப்பு செய்கிறார்.சூப்பர் நேச்சுரல் திரில்லர் வகைமையில் இந்த திரைப்படம் உருவாகிறது. கொல்கத்தா நகரை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கி ஜூலை 26ல் அனைத்து படப்பிடிப்பும் நிறைவடைந்தது.

இதுவரை கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள், டீசர், பாடல்கள் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்த படத்தில் வாசு எனும் கதாபாத்திரத்தில் நானி நடிக்கிறார். சில தினங்களுக்கு முன் படக்குழு  நானியின் புதிய லுக்கை படக்குழு ஒரு வீடியோ மூலம் வெளியிட்டது. அதில் இந்த படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 24 அன்று தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என 4 மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. கடந்த ஜென்ம ஞாபகத்தை அடிப்படையாக வைத்து டிரெய்லர் அமைந்துள்ளது, நானி இரு வேடங்களில் நடிக்க, நடிகையாக கீரித்தி ஷெட்டியும், தேவதாசியாக, காதலியாக சாய்பல்லவியும் நடித்துள்ளனர், மடோனா செபாஸ்டியனும் முக்கிய ரோலில் நடித்துள்ளார். படத்தின் டிரெய்லர் வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாறுபட்ட வேடத்தில் நானி! தேவதாசியாக சாய் பல்லவி! எதிர்பார்ப்பை எகிற வைத்த SSR படத்தின் TRAILER VIDEO! வீடியோ

Shyam Singha Roy Trailer Nani Sai Pallavi Krithi Shetty

People looking for online information on Abhinav Gomatam Director Rahul Sankrityan Producer Venkat S Boyanapalli Banner Niharika Entertainment Original Story Satyadev Janga Music Director Mickey J Meyer Cinematography Sanu John Varghese Production Designer Avinash Kolla Executive Producer , Krithi Shetty, KrithiShetty, Madonna Sebastian, Madonna Sebastian Directed By Rahul Sankrithyan Under Niharika Entertainment Production. SSRTrailer Movie - ShyamSinghaRoy Cast Nani, Murali Sharma, Natural Star Nani, Rahul Ravindran, Sai Pallavi, Saipallavi, Shyam Singha Roy, Shyam Singha Roy Telugu Trailer will find this news story useful.