உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன், கொரோனா தொற்றுக்கு பிறகான கால கட்டத்தில், அதிகம் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
எதிர்நீச்சல்’ சீரியல் சர்ச்சை திருமண காட்சி? - "தப்பா புரிஞ்சுகிட்டாங்க" - இயக்குநர் Exclusive
உணவு சமையல் குறிப்புகள், வீட்டில் வேலை செய்வது, மேக்கப் மற்றும் பேஷன் சார்ந்த போட்டோ சூட் என பல விஷயங்களை தன்னுடைய சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகிறார்.
இன்னொரு பக்கம், நிறைய திரைப்படங்களில் நடிப்பதிலும் ஸ்ருதி ஹாசன் மும்முரமாக இருந்து வருகிறார்.
லாபம் திரைப்படம்
ஸ்ருதி ஹாசனின் நடிப்பில், கடைசியாக தமிழில் 'லாபம்' என்னும் திரைப்படம் வெளியாகி இருந்தது. மறைந்த இயக்குனர் எஸ்.பி ஜனநாதன் இயக்கி இருந்த இந்த திரைப்படத்தில், விஜய் சேதுபதி நாயகனாக நடித்திருந்தார்.
அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களுடன் ஜோடி
இதற்கு அடுத்தபடியாக, பிரபாஸுடன் இணைந்து 'சலார்' என்ற படத்தின் நாயகியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கவுள்ளார். இந்த படம் ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் படமாக்கப்படுகிறது. மற்ற தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்படுகிறது. கே ஜி எப் இயக்குனர் பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்குகிறார்.
இதற்கு அடுத்தபடியாக, பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்கவும் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.பாலகிருஷ்ணாவின் படத்தைத் தொடர்ந்து, நடிகர் சிரஞ்சீவியுடன் மெகா154 என தற்காலிக பெயரிடப்பட்டுள்ள படத்திலும் ஸ்ருதி ஹாசன் நடிக்கவுள்ளார். இப்படி அடுத்தடுத்து, பெரிய ஹீரோ படங்களில் நடிக்கவுள்ள ஸ்ருதி ஹாசன், இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஆக்டிவாக இருக்கத் தவறுவதில்லை.
வொர்க் அவுட் வீடியோ
அந்த வகையில், தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில், ஸ்ருதி ஹாசன் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று, நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. முழங்கைக்கு வேண்டி, தன்னுடைய பயிற்சியாளருடன் இணைந்து, மிகவும் வேகமாகவும், அதே வேளையில் கடுமையான ஆக்ரோஷத்துடனும், மிகத் தீவிரமாகவும் உடற்பயிற்சி செய்கிறார். அது மட்டுமில்லாமல், அடி ஒவ்வொன்றும் இடி மாதிரி விழுகிறது.
தனது லைஃப் ஸ்டைல் குறித்து, தொடர்ந்து பகிர்ந்து வரும் நடிகை ஸ்ருதி ஹாசன், வொர்க் அவுட் தொடர்பான வீடியோக்களையும் பகிர்ந்துள்ளது, ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாக பரவி வருகிறது.
"இந்த தப்ப தயவு செஞ்சு பண்ணாதீங்க.." பாலா - நிரூப் மோதல்.. ஃபேன்ஸ்க்கு சிம்பு போட்ட அன்பு கட்டளை