தீயாய் பரவும் வீடியோ.. கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த ஸ்ருதிஹாசன்..! காரணம் இது தான்...

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மும்பை: தனது ஆண் நண்பருக்கு ஸ்ருதிஹாசன் முத்தம் கொடுக்கும் ஜாலியான வீடியோ வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

ஸ்ருதி ஹாசன் கடைசியாக எஸ்பி ஜனநாதனின் கடைசி படமான 'லாபம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த லாபம் திரைப்படம் பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 

தற்போது ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக பிரபாஸுடன் இணைந்து 'சலார்' என்ற படத்தில் அவர் நடிக்க உள்ளார். இந்த படம் ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் படமாக்கப்படுகிறது.

மற்ற தமிழ், மலையாளம், இந்தியில் டப் செய்யப்படுகிறது. கே ஜி எப் இயக்குனர் பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்குகிறார். புவன் கவுடா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். ஜனவரி 2021 இல் தெலுங்கானாவின் கோதாவரிகானியில் படத்தின் முதன்மை படப்பிடிப்பு தொடங்கியது. இந்தப் படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரிக்கிறார்.

அடுத்ததாக ஸ்ருதிஹாசன் தற்போது 'NBK 107' என்ற புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் கதாநாயகியாக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது பாலகிருஷ்ணாவின் கேரியரில் 107வது படமாக உருவாக உள்ளது. 'பலுபு' மற்றும் 'கிராக்' போன்ற படங்களில் இணைந்து பணியாற்றிய ஸ்ருதி, இயக்குனர் கோபிசந்துடன் இணைந்து பணியாற்றுவது இது மூன்றாவது முறையாகும்.

பாலகிருஷ்ணாவை தொடர்ந்து, நடிகர் சிரஞ்சீவியுடன் மெகா154 என தற்காலிக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்கிறார். இதனை சிரஞ்சீவி டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஒரே நேரத்தில் தெலுங்கு சூப்பர்ஸ்டார்கள் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா உடன் ஸ்ருதிஹாசன் ஜோடி சேர உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கு காலத்தை சமூக வலை தளங்களில் செலவு செய்த நடிகைகளில்  ஸ்ருதி ஹாசன் முக்கியமானவர். வேலை செய்வது, உணவு சமையல் குறிப்புகளைப் பகிர்வது, தனது பூனை கிளாராவுடன் விளையாடுவது, மற்றும் மேக்கப் மற்றும் பேஷன் சார்ந்த  போட்டோ சூட் ஆகியவற்றை சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பகிர்ந்து வந்தார்.

முன்பு லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சேலை என்ற தியேட்டர் ஆர்டிஸ்டை காதலித்தார். பின் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2019ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். தற்போது அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த சாந்தனு ஹசாரிகாவுடன் ஸ்ருதிஹாசனுக்கு காதல் மலர்ந்துள்ளது.

இந்நிலையில் தனது ஆண் நண்பரை ஜாலியாக வெறுப்பேற்றி ஸ்ருதிஹாசன் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில், ஆண் நண்பரிடம் சென்று பேசி முத்தம் கொடுத்து வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவுக்கு கேப்சனாக "நீங்கள் அவரை படம் பிடிக்கலாம் உங்கள் மீது நிரந்தரமாக எரிச்சலடையாத வரை" என கேப்சன் போட்டுள்ளார். 

 

தீயாய் பரவும் வீடியோ.. கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த ஸ்ருதிஹாசன்..! காரணம் இது தான்... வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Shruthihaasan with her boyfriend Santanu Hazarika

People looking for online information on ஸ்ருதி ஹாசன், Shruthi, Shruthi Haasan will find this news story useful.