ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகும் ஸ்ருதிஹாசன் நடித்த மாஸ் படங்கள்..! ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'உலகநாயகன்' கமல்ஹாசனின் வாரிசாக இருந்தாலும், தன்னுடைய தனித்துவமான திறமையினால் திரை உலகில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசனின் நடிப்பில்  தயாராகி இருக்கும் 'வால்டேர் வீரய்யா' மற்றும் 'வீரசிம்ஹா ரெட்டி' என இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகவிருக்கிறது.

shruthihaasan veera simha reddy and waltair veerayya sankranti
Advertising
>
Advertising

Also Read | Baba : ரஜினிகாந்தின் பாபா ரீ ரிலீஸ் ... வெளிநாட்டு உரிமத்தை கைப்பற்றிய லைகா நிறுவனம்..!

நடிகை ஸ்ருதிஹாசன், சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கும் முன்னணி நட்சத்திரம் ஆவார். மில்லியன் கணக்கிலான மக்களை தன் சமூக வலைதள பக்கங்களின் பின் தொடர்பாளர்களாக கொண்டிருக்கும் இவர், தன்னை பற்றிய செய்திகளையும்,  தான் உணர்ந்த உணர்வுகளையும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதுண்டு.

shruthihaasan veera simha reddy and waltair veerayya sankranti

இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக, மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'வால்டேர் வீரய்யா' என்ற திரைப்படத்திலும், மாஸ் ஹீரோ பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகி இருக்கும் 'வீரசிம்ஹா ரெட்டி' எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்த இரண்டு திரைப்படங்களும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சங்கராந்தி திருவிழா விடுமுறை தினத்தில் வெளியாகிறது.

ஒரே நாளில் அவர் நடிப்பில் தயாராகி இருக்கும் இரண்டு படங்களும் வெளியாவதால், அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள். அத்துடன் ரசிகர்களுக்கு முதன்முறையாக அவர் இப்படி டபுள் ட்ரீட் வழங்குவதால் மகிழ்ச்சியடைந்த அவருடைய ரசிகர்கள், இதனை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள். இதனிடையே நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது 'கே. ஜி. எஃப்' புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் நடிக்கும் 'சலார்' எனும் திரைப்படத்திலும், 'தி ஐ' எனும் ஹாலிவுட் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | பிக்பாஸில் இருந்து வெளியே வந்த தன் ‘லவ்லி’ மகளுடன் ராபர்ட் .. நெகிழ்ச்சி ஃபோட்டோஸ்..! Bigg boss 6

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Shruthihaasan veera simha reddy and waltair veerayya sankranti

People looking for online information on Shruthi Haasan, Shruti Haasan, Veera Simha Reddy, Waltair Veerayya will find this news story useful.