"இத சாப்ட்டு WORKOUT பண்றவங்க ஒன்னா இருப்பாங்க" - ஆண் நண்பருடன் ஸ்ருதிஹாசன் வைரல் பதிவு.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஸ்ருதிஹாசனின் சமீபத்திய ஒர்க் அவுட் போட்டோ மற்றும் அதற்கு அவர் இட்ட தலைப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | பிரான்ஸ்க்குச் சுற்றுலா போன பிரியா பவானி சங்கர்.. பிரபல ஹீரோவின் 'காமெடி' கமெண்ட்..!

சமூக வலை தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில்  ஸ்ருதி ஹாசன் முக்கியமானவர். வேலை செய்வது, உணவு சமையல் குறிப்புகளைப் பகிர்வது, தனது பூனை கிளாராவுடன் விளையாடுவது, மற்றும் மேக்கப் மற்றும் பேஷன் சார்ந்த  போட்டோ ஷூட் ஆகியவற்றை சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பகிர்வதை ஸ்ருதி ஹாசன் வாடிக்கையாக கொண்டவர்.

சிலநாட்களுக்கு முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த புகைப்படத்துடன்‌ படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு திரும்பி விட்டதாக கூறி இருந்தார். தனது பூனை கிளாரா உடன் எடுத்த வீடியோவையும் வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் தற்போது நடிகை ஸ்ருதி ஹாசன் தனது ஆண் நண்பர் சாந்தனு உடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் "அரிசி சாதம் சாப்பிட்ட பிறகு  ஒன்றாக உடற்பயிற்சி செய்பவர்கள் ஒன்றாக இருப்பார்கள்" என கூறியுள்ளார்.

ஸ்ருதிஹாசன் நடிப்பில் கடைசியாக 'லாபம்' திரைப்படம் வெளியானது. அடுத்ததாக ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக பிரபாஸுடன் இணைந்து 'சலார்' என்ற படத்தில் அவர் நடிக்கிறார். இந்த படம் ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் படமாக்கப்படுகிறது. மற்ற தமிழ், மலையாளம், இந்தியில் டப் செய்யப்படுகிறது.

கே ஜி எப் இயக்குனர் பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்குகிறார். புவன் கவுடா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். ஜனவரி 2021 இல் தெலுங்கானாவின் கோதாவரிகானியில் படத்தின் முதன்மை படப்பிடிப்பு தொடங்கியது. இந்தப் படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரிக்கிறார்.

மேலும் இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் கதாநாயகியாக ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பாலகிருஷ்ணாவை தொடர்ந்து, நடிகர் சிரஞ்சீவியுடன் மெகா154 என தற்காலிக பெயரிடப்பட்டுள்ள படத்திலும் நடிக்கிறார்.

ஒரே நேரத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா உடன் ஸ்ருதிஹாசன் ஜோடி சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | மும்பையில் குடும்பத்துடன் சூர்யா & ஜோதிகா.. இணையத்தை கலக்கும் செம போட்டோஸ் & வீடியோஸ்

தொடர்புடைய இணைப்புகள்

Shruthi Haasan workout with her boyfriend santanu

People looking for online information on Shruthi Haasan workout, Shruti Haasan will find this news story useful.