MONOCHROME போட்டோஷூட்டில் மாஸ் காட்டிய ஸ்ருதிஹாசன்.. இதுக்கு தானா? வெளிவந்த செம போட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஸ்ருதிஹாசனின் சமீபத்திய போட்டோ ஷூட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களின் நகைகள்..இந்த பிரபல நகைக்கடையில தயாரிச்சதாம்! BTS வீடியோ

சமூக வலை தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில்  ஸ்ருதி ஹாசன் முக்கியமானவர்.

வேலை செய்வது, உணவு சமையல் குறிப்புகளைப் பகிர்வது, தனது பூனை கிளாராவுடன் விளையாடுவது, மற்றும் மேக்கப் மற்றும் பேஷன் சார்ந்த  போட்டோ ஷூட் ஆகியவற்றை சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பகிர்வதை ஸ்ருதி ஹாசன் வாடிக்கையாக கொண்டவர்.

சிலநாட்களுக்கு முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த புகைப்படத்துடன்‌ படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு திரும்பி விட்டதாக கூறி இருந்தார். தனது பூனை கிளாரா உடன் எடுத்த வீடியோவையும் வெளியிட்டு இருந்தார்.

ஸ்ருதிஹாசன் நடிப்பில் கடைசியாக 'லாபம்' திரைப்படம் வெளியானது. அடுத்ததாக ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக பிரபாஸுடன் இணைந்து 'சலார்' என்ற படத்தில் அவர் நடிக்கிறார். இந்த படம் ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் படமாக்கப்படுகிறது. மற்ற தமிழ், மலையாளம், இந்தியில் டப் செய்யப்படுகிறது.

கே ஜி எப் இயக்குனர் பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்குகிறார். புவன் கவுடா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். ஜனவரி 2021 இல் தெலுங்கானாவின் கோதாவரிகானியில் படத்தின் முதன்மை படப்பிடிப்பு தொடங்கியது. இந்தப் படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரிக்கிறார்.

மேலும் இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் கதாநாயகியாக ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பாலகிருஷ்ணாவை தொடர்ந்து, நடிகர் சிரஞ்சீவியுடன் மெகா154 என தற்காலிக பெயரிடப்பட்டுள்ள படத்திலும் நடிக்கிறார்.

ஒரே நேரத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா உடன் ஸ்ருதிஹாசன் ஜோடி சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மோனோக்ரோம் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதற்கு தலைப்பாக "கருப்பு வெள்ளை நிறங்களை விட சாம்பல் நிறத்தில் கதைகள் உயிரோட்டமாக இருக்கும்" என தலைப்பிட்டுள்ளார்.

இந்த போட்டோ ஷூட் பிரபல நனி சைவ அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான பல்ப் இந்தியா நிறுவனத்திற்காக ஸ்ருதிஹாசன் நடத்தியுள்ளார்.

Also Read | நீச்சல் குளத்தில் கணவர் நிக் ஜோன்ஸ் & குழந்தையுடன் பிரியங்கா சோப்ரா.. UNSEEN PHOTO!

தொடர்புடைய இணைப்புகள்

Shruthi Haasan Latest Photoshoot for Pulp India

People looking for online information on Shruthi Haasan Latest Photoshoot, Shruti Haasan will find this news story useful.