ஸ்ருதி ஹாசன் கடைசியாக தமிழில் எஸ்பி ஜனநாதனின் கடைசி படமான 'லாபம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த லாபம் திரைப்படம் பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
Also Read | விஜய் தேவரகொண்டா கொடுத்த செம்ம சர்ப்ரைஸ்! கண்ணீர் விட்டு அழுத சமந்தா.. வைரல் வீடியோ
அடுத்ததாக ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக பிரபாஸுடன் இணைந்து 'சலார்' என்ற படத்தில் அவர் நடிக்க உள்ளார். இந்த படம் ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் படமாக்கப்படுகிறது.
மற்ற தமிழ், மலையாளம், இந்தியில் டப் செய்யப்படுகிறது. கே ஜி எப் இயக்குனர் பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்குகிறார். புவன் கவுடா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். ஜனவரி 2021 இல் தெலுங்கானாவின் கோதாவரிகானியில் படத்தின் முதன்மை படப்பிடிப்பு தொடங்கியது. இந்தப் படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரிக்கிறார்.
மேலும் ஸ்ருதிஹாசன் 'NBK 107' என்ற புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக சில நாட்களுக்கு முன் தெரிவித்துள்ளார். இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் கதாநாயகியாக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது பாலகிருஷ்ணாவின் கேரியரில் 107வது படமாக உருவாக உள்ளது. 'பலுபு' மற்றும் 'கிராக்' போன்ற படங்களில் இணைந்து பணியாற்றிய ஸ்ருதி, இயக்குனர் கோபிசந்துடன் இணைந்து பணியாற்றுவது இது மூன்றாவது முறையாகும்.
பாலகிருஷ்ணாவை தொடர்ந்து, நடிகர் சிரஞ்சீவியுடன் மெகா154 என தற்காலிக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்கிறார். இதனை சில நாட்களுக்கு முன் சிரஞ்சீவி டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஒரே நேரத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா உடன் ஸ்ருதிஹாசன் ஜோடி சேர உள்ளது குறிப்பிடத்தக்கது.
சமூக வலை தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஸ்ருதி ஹாசன் முக்கியமானவர். வேலை செய்வது, உணவு சமையல் குறிப்புகளைப் பகிர்வது, தனது பூனை கிளாராவுடன் விளையாடுவது, மற்றும் மேக்கப் மற்றும் பேஷன் சார்ந்த போட்டோ சூட் ஆகியவற்றை சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பகிர்ந்து வந்தார் ஸ்ருதி ஹாசன். இந்நிலையில் ஸ்ருதிஹாசன், தனது மேக்கப் வீடியோவை பகிர்ந்து, பல வித சேட்டைகள் மற்றும் முகபாவனைகளை மாற்றி, சில உடல்மொழிகளை மாற்றி நடனமும் ஆடி வீடியோவை வெளியிட்டுள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8