சமூக வலை தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஸ்ருதி ஹாசன் முக்கியமானவர்.

Also Read | விதார்த் நடிக்கும் புதிய சைக்கோ த்ரில்லர் படம்.. வெளியான படப்பூஜை ஸ்டில்கள்! முழு தகவல்
வேலை செய்வது, உணவு சமையல் குறிப்புகளைப் பகிர்வது, தனது பூனை கிளாராவுடன் விளையாடுவது, மற்றும் மேக்கப் மற்றும் பேஷன் சார்ந்த போட்டோ ஷூட் ஆகியவற்றை சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பகிர்வதை ஸ்ருதி ஹாசன் வாடிக்கையாக கொண்டவர்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டு பதிவிட்டுள்ளார். அதில், "என்னுடன் இணைந்து உட்ற்பயிற்சி செய்யுங்கள். எனது பிசிஓஎஸ் மற்றும் எண்டோமெட்ரியோசிஸ் நோயால் நான் மோசமான ஹார்மோன் பிரச்சனைகளை எதிர்கொள்கிறேன் - இது சமநிலையின்மை மற்றும் வீக்கம் மற்றும் வளர்சிதை மாற்ற சவால்களுடன் கடினமான போராட்டம் என்று பெண்களுக்கு தெரியும் - ஆனால் அதை ஒரு சண்டையாக பார்க்காமல் நான் ஏற்றுக்கொள்கிறேன் இயற்கையான இயக்கமாக என் உடல் அதைச் செய்யச் செல்லும், அதைச் செய்வதற்கு நான் நன்றி சொல்கிறேன், சரியாக சாப்பிட்டு நன்றாக தூங்கி, என் வேலைகளை அனுபவித்து மகிழ்கிறேன் - என் உடல் இப்போது சரியாக இல்லை, ஆனால் என் இதயம் நன்றாக இருக்கிறது !!! எனக்கு கொஞ்சம் பிரசங்கித்தனம் என்று தெரியும் ஆனால் இந்த சவால்களை ஏற்று என்னை வரையறுத்து விடாமல் இருக்க இது ஒரு பயணம்.. அதனால்...! இதை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்" என தெரிவித்துள்ளார்.
ஸ்ருதிஹாசன் நடிப்பில் கடைசியாக 'லாபம்' திரைப்படம் வெளியானது. அடுத்ததாக ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக பிரபாஸுடன் இணைந்து 'சலார்' என்ற படத்தில் அவர் நடிக்கிறார். இந்த படம் ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் படமாக்கப்படுகிறது. மற்ற தமிழ், மலையாளம், இந்தியில் டப் செய்யப்படுகிறது.
கே ஜி எப் இயக்குனர் பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்குகிறார். புவன் கவுடா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். ஜனவரி 2021 இல் தெலுங்கானாவின் கோதாவரிகானியில் படத்தின் முதன்மை படப்பிடிப்பு தொடங்கியது. இந்தப் படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரிக்கிறார்.
இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் கதாநாயகியாக ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாலகிருஷ்ணாவை தொடர்ந்து, நடிகர் சிரஞ்சீவியுடன் மெகா154 என தற்காலிக பெயரிடப்பட்டுள்ள படத்திலும் நடிக்கிறார்.
ஒரே நேரத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா உடன் ஸ்ருதிஹாசன் ஜோடி சேர உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read | 'ஓ சொல்றியா மாமா' & 'அரபிக்குத்து' பாட்டுக்கு செம்ம குத்து டான்ஸ் ஆடிய சன்னி லியோன்! வேறலெவல் VIDEO