'KGF' இயக்குனர் & பிரபாஸ் இணையும் புதிய படம்.. படப்பிடிப்பில் இணைந்த முன்னணி தமிழ் நடிகை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2018 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் உருவாகி இந்தியா முழுவதும் வெற்றியடைந்த படம் KGF.

Shruthi haasan joined prabhas salaar movie shooting 'KGF'
Advertising
>
Advertising

இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கினார். யாஷ் ஹீரோவாக நடித்தார். இந்த படத்தின் வெற்றியைத்தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவானது. ஹோம்பாலே பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்த 'கே ஜி எஃப் சாப்டர் 2’ திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு (ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி) வெளியாகியது. இந்த படம் உலகம் 10,000 திரையரங்குகளில் ரிலீசாகி 1000 கோடி ரூபாய் வசூலை குவித்தது.

Shruthi haasan joined prabhas salaar movie shooting 'KGF'

'கே.ஜி.எஃப்' படத்தின் முதல் இரண்டு பாகங்களை இயக்கிய இயக்குனர் பிரசாந்த் நீல், 'கே.ஜி.எஃப்' பட நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் பிரபாஸ் கதாநாயகானாக நடிக்கும் ’சலார் ’ படத்தை தற்போது இயக்கி வருகிறார்.

இந்த படம் ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் படமாக்கப்படுகிறது. மற்ற தமிழ், மலையாளம், இந்தியில் டப் செய்யப்படுகிறது. புவன் கவுடா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். ஜனவரி 2021 இல் தெலுங்கானாவின் கோதாவரிகானியில் படத்தின் முதன்மை படப்பிடிப்பு தொடங்கியது.

சில நாளுக்கு முன் சலார் படத்தின் அப்டேட்டுகளுக்காக ‘சலார்’ படத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தை படத்தயாரிப்பு நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் இப்படத்தின் படப்பிடிப்பில் இன்று (24.05.2022) நடிகை ஸ்ருதி ஹாசன் இணைந்துள்ளார். இதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ருதிஹாசன் அறிவித்துள்ளார்.

இந்த படத்தில் ஆத்யா எனும் கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Shruthi haasan joined prabhas salaar movie shooting 'KGF'

People looking for online information on KGF, KGF Chapter 2, Prabhas, Shruthi Haasan will find this news story useful.