நடிகை ஸ்ருதிஹாசன் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுத்த பாகுபலி பிரபாஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மும்பை: நடிகை ஸ்ருதிஹாசன் பிறந்தநளில் நடிகர் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் கொடுத்துள்ளனர்.

Advertising
>
Advertising

ஸ்ருதி ஹாசன் கடைசியாக எஸ்பி ஜனநாதனின் கடைசி படமான 'லாபம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த லாபம் திரைப்படம் பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது.  ஸ்ருதிஹாசன் தற்போது 'NBK 107' என்ற புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் கதாநாயகியாக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது பாலகிருஷ்ணாவின் கேரியரில் 107வது படமாக உருவாகவுள்ளது. 'பலுபு' மற்றும் 'கிராக்' போன்ற படங்களில் இணைந்து பணியாற்றிய ஸ்ருதி, இயக்குனர் கோபிசந்துடன் இணைந்து பணியாற்றுவது இது மூன்றாவது முறையாகும்.

அடுத்ததாக ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக பிரபாஸுடன் இணைந்து 'சலார்' என்ற படத்தில் அவர் நடிக்க உள்ளார். இந்த படம் ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் படமாக்கப்படுகிறது. மற்ற தமிழ், மலையாளம், இந்தியில் டப் செய்யப்படுகிறது. கே ஜி எப் இயக்குனர் பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்குகிறார். புவன் கவுடா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். ஜனவரி 2021 இல் தெலுங்கானாவின் கோதாவரிகானியில் படத்தின் முதன்மை படப்பிடிப்பு தொடங்கியது. இந்தப் படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரிக்கிறார்.

'கடவுள் என் ப்ரா சைஸை அளவிடுகிறார்'.. விவகார பேச்சால் சிக்கலில் பிரபல BIGGBOSS நடிகை!

இந்த படம் நீலின் முதல் படமான உக்ரம் படத்தின் ரீமேக் என்று ஒரு சில தகவல்கள் கூறுகின்றன, இருப்பினும், சலார் ரீமேக் படம் அல்ல, இது பிரபாஸுக்காக எழுதப்பட்ட அசல் கதை என்று இயக்குனர் நீல் தெளிவுபடுத்தினார். இந்நிலையில் ஸ்ருதி ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு அவரின் கதாபாத்திர போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த படத்தில் ஆத்யா எனும் கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்.

தினேஷ் கார்த்திக் உடன் ஜான்வி கபூர்.. இது வேற லெவல் ஆச்சே! பிரமிப்பில் ரசிகர்கள்!

தொடர்புடைய இணைப்புகள்

Shruthi Haasan Birthday prabhas salaar team released a poster

People looking for online information on ஸ்ருதிஹாசன், Prabhas salaar team, Shruthi Haasan will find this news story useful.