காதலரோடு ஸ்ருதிஹாசன் விளையாடும் இந்த கேம் நல்லா இருக்கே..! க்யூட் ஆன வைரல் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

.ஊரடங்கு காலத்தை சமூக வலை தளங்களில் செலவு செய்த நடிகைகளில்  ஸ்ருதி ஹாசன் முக்கியமானவர்.

shruthi haasan and her lover play a game on instagram viral video
Advertising
>
Advertising

வேலை செய்வது, உணவு சமையல் குறிப்புகளைப் பகிர்வது, தனது பூனை கிளாராவுடன் விளையாடுவது, மற்றும் மேக்கப் மற்றும் பேஷன் சார்ந்த  போட்டோ சூட் ஆகியவற்றை சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பகிர்ந்து வந்தார். ஸ்ருதி ஹாசன் கடைசியாக எஸ்பி ஜனநாதனின் கடைசி படமான 'லாபம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

shruthi haasan and her lover play a game on instagram viral video

இந்த லாபம் திரைப்படம் பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அடுத்ததாக ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக பிரபாஸுடன் இணைந்து 'சலார்' என்ற படத்தில் அவர் நடிக்க உள்ளார். இந்த படம் ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் படமாக்கப்படுகிறது. ஸ்ருதிஹாசன் தற்போது 'NBK 107' என்ற புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் கதாநாயகியாக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது பாலகிருஷ்ணாவின் கேரியரில் 107வது படமாக உருவாகவுள்ளது. 'பலுபு' மற்றும் 'கிராக்' போன்ற படங்களில் இணைந்து பணியாற்றிய ஸ்ருதி, இயக்குனர் கோபிசந்துடன் இணைந்து பணியாற்றுவது இது மூன்றாவது முறையாகும். 

முன்பு லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சேலை என்ற தியேட்டர் ஆர்டிஸ்டை காதலித்தார். பின் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2019ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். இந்நிலையில் அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த சாந்தனு ஹசாரிகாவுடன் ஸ்ருதிஹாசனுக்கு காதல் மலர்ந்தது.  ஸ்ருதிஹாசன் காதலருடன் கேம் ஆடும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி உள்ளார்.   

அதில் காதலர்களிடம் கேட்கும் கேள்விகளுக்கு சைகை மூலம் யார் என்று பாதில் அளிக்க வேண்டும், அதன்படி முதலில் யார் ஐ லவ் யூ சொன்னது?, பணத்தை யார் அதிகம் செலவளிப்பது?, யார் முதலில் தூங்குவது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டது. இதில் இருவரும் ஒரே நேரத்தில் அளித்த பதில்கள் தற்போது வைரலாகி வருகின்றன. இந்த வீடியோவில் முதலில் ஸ்ருதிஹாசனே தனது காதலை  வெளிப்படுத்தியதாக கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Shruthi haasan and her lover play a game on instagram viral video

People looking for online information on காதல், ஸ்ருதி ஹாசன், Shruthi, Shruthi Haasan Lover, Shruti Haasan, Sruthi will find this news story useful.