முகம் வீங்கிய போட்டோவை வெளியிட காரணம் இது தான்! நடிகை ஸ்ருதிஹாசன் விளக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமூக வலை தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில்  ஸ்ருதி ஹாசன் முதன்மையானவர்.

Advertising
>
Advertising

Also Read | வருங்கால கணவருடன் டான்ஸ்.. வெட்கத்தில் சிரித்த ஹன்சிகா! அசத்தல் வீடியோ

வேலை செய்வது, உணவு சமையல் குறிப்புகளைப் பகிர்வது, தனது பூனை கிளாராவுடன் விளையாடுவது, மற்றும் மேக்கப் மற்றும் பேஷன் சார்ந்த  போட்டோ ஷூட் ஆகியவற்றை சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பகிர்வதை ஸ்ருதி ஹாசன் வாடிக்கையாக கொண்டவர்.

ஸ்ருதிஹாசன் நடிப்பில் கடைசியாக 'லாபம்' திரைப்படம் தமிழில் வெளியானது. அடுத்ததாக ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக பிரபாஸுடன் இணைந்து 'சலார்'  படத்தில் நடிக்கிறார். இந்த படம் ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் படமாக்கப்படுகிறது. மற்ற தமிழ், மலையாளம், இந்தியில் டப் செய்யப்படுகிறது.

கே ஜி எப் இயக்குனர் பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்குகிறார். புவன் கவுடா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். ஜனவரி 2021 இல் தெலுங்கானாவின் கோதாவரிகானியில் படத்தின் முதன்மை படப்பிடிப்பு தொடங்கியது. இந்தப் படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரிக்கிறார்கள்.

மேலும் இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் 107வது படத்தில் கதாநாயகியாக ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பாலகிருஷ்ணாவை தொடர்ந்து, நடிகர் சிரஞ்சீவியுடன் மெகா154 என தற்காலிக பெயரிடப்பட்டுள்ள படத்திலும் நடிக்கிறார்.

ஒரே நேரத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா உடன் ஸ்ருதிஹாசன் ஜோடி சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது கிரிஸ் நாட்டில் இருக்கும் ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டு, சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில், "சரியான செல்ஃபி போட்டோக்கள் மற்றும் சரியான பதிவுகள் நிறைந்த இந்த சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதற்கு தேர்வு செய்யாத புகைப்படங்கள் இவை. மோசமான தலைமுடி, காய்ச்சல், ஜலதோஷம் மற்றும் சைனஸ் காரணமாக முகம் வீங்கியுள்ளது. இதையும் நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்" என ஸ்ருதிஹாசன் பதிவிட்டு இருந்தார். இச்சூழலில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் மேலும் சில தகவல்களை ஸ்ருதிஹாசன் பகிர்ந்துள்ளார். அதில், " மனநலம், மாதவிடாய், ஆரோக்கியம் மற்றும் என் வீங்கிய சைனஸ் முகத்தைப் பற்றி பேசுவது சமூகத்தில் இயல்பாகும் வரை தொடர்ந்து பதிவிடுவேன்.

உங்கள் உடல் அல்லது மன நிலையைப் பற்றி யாரும் கருத்து சொல்ல முடியாது. நீங்கள் விரும்புவதைச் செய்யுங்கள், இது உங்கள் வாழ்க்கை. அது இயல்பான பாசிட்டிவ் வைப் ஆக இருக்க வேண்டும்

சமூக வலைத்தளங்களில் கமெண்ட் பகுதி என்பது வெறுப்பை உமிழ அல்ல" என கூறியுள்ளார்.

Also Read | ஒரு பாட்டுக்கு மட்டும் 15 கோடி செலவில் ஷூட்டிங்.. ஷங்கரின் RC15 படத்தின் வைரல் போட்டோஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Shruthi Haasan about latest instgram post about sinusitis

People looking for online information on Shruthi Haasan, Shruthi Haasan latest instgram post will find this news story useful.