CWC நிகழ்ச்சியில் இருந்து விலகிய மணிமேகலை.. பிரபல நடிகை பகிர்ந்த உருக்கமான பதிவு!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏரளமான ரியாலிட்டி ஷோக்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறது. அதில் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.

Images are subject to © copyright to their respective owners

Advertising
>
Advertising

சமையல் என்ற ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு மிகவும் கலகலப்பாக இந்த நிகழ்ச்சி செல்வதால், இதற்கு ஏராளமான ரசிகர்களும் உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பிரபல செஃப்கள் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் இருந்து வரும் சூழலில், அவர்களும் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் இடையே மிகவும் கலகலப்பாக அரட்டை அடித்து அனைவரையும் கலாய்த்துக் கொண்டே இருப்பதால் நிகழ்ச்சி இன்னும் சுவாரஸ்யமாகவும் செல்கிறது.

குக் வித் கோமாளி 4

இதுவரை 3 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தொடர்ந்து, 4 ஆவது குக் வித் கோமாளி சீசனும் தற்போது ஒளிபரப்பாகி முந்தைய சீசன்களை போல வரவேற்பை பெற்று வருகிறது. குக் வித் கோமாளி 4 ஆவது சீசனில் மைம் கோபி, விசித்ரா, ஷெரின், ராஜ் ஐயப்பா, காளையன், கிஷோர் ராஜ்குமார், சிவாங்கி, ஸ்ருஷ்டி டாங்கே, விஜே விஷால், ஆண்ட்ரியா நவுரிகட் உள்ளிட்ட 10 பேர் போட்டியாளர்களாக களமிறங்கினர். போட்டியாளர்களை போல இதில் வரும் கோமாளிகளுக்கும் மக்கள் மத்தியில் அதிக ரசிகர்கள் உள்ளனர்.

Images are subject to © copyright to their respective owners

விலகிய மணிமேகலை

இதனிடையே, கடந்த மூன்று சீசன்களில் குக் வித் கோமாளி தொடரில் சிறந்த கோமாளியாக வலம் வந்த மணிமேகலை, இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தார். இது தொடர்பாக உருக்கமாக பதிவு ஒன்றையும் மணிமேகலை பகிர்ந்திருந்தார்.

Images are subject to © copyright to their respective owners

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கி பலரையும் தன் பக்கம் கவனம் ஈர்க்க வைத்தவர் மணிமேகலை. அவரது முடிவு ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. இது தொடர்பாக குக் வித் கோமாளி பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பற்றி கருத்து தெரிவித்திருந்தனர்.

நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவின் உருக்கமான பதிவு

இந்த நிலையில், நான்காவது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி இருக்கும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவும் மணிமேகலை விலகி உள்ளது பற்றி இன்ஸ்டாவில் ஸ்டோரி ஒன்றை பகிர்ந்துள்ளார்.

மணிமேகலையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்த நடிகை ஸ்ருஷ்டி டாங்கே, "ஹாய் மணி முதல்ல நான் உன்னை செட்டில் ரொம்ப மிஸ் பண்றேன். எல்லோருமே உன்னை மிஸ் செய்கிறோம். நிகழ்ச்சியின் சூட்டிங் நடந்த இரண்டாவது நாளில் இந்த நிகழ்ச்சியில் அதிகமாக பார்வையாளர்களை என்டர்டைன்மென்ட் செய்வதாக உன்னை தான் நான் குறிப்பிட்டேன். மேலும் உன்னுடைய பெர்ஃபார்மன்ஸை மிக அருகில் நான் ரசிக்கவும் செய்துள்ளேன்.

Images are subject to © copyright to their respective owners

மேலும் உன்னுடன் குக் வித் கோமாளி செட்டை பகிர்ந்து கொள்ள முடிந்தது நான் மிகப் பெருமையாக கருதுகிறேன்" என நெகழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ள ஸ்ருஷ்டி டாங்கே மணிமேகலை வாழ்க்கையில் அனைத்தும் சிறந்த முறையில் நடக்க வேண்டும் என தான் வாழ்த்துவதாகவும் அனைத்து அன்பையும் பாசிட்டிவ் வைப்களையும் வருங்காலத்திற்காக மணிமேகலைக்காக பகிர்ந்து கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தவிர இன்னும் சில சிறப்பான தருணங்கள் குறித்தும் அதில் ஸ்ருஷ்டி டாங்கே பகிர்ந்துள்ள சூழலில், இந்த பதிவு ரசிகர்கள் பலரையும் உருக வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Shrusti Dange emotional post on Manimegalai quit from CWC

People looking for online information on Cooku With Comali 4, Manimegalai, Shrusti Dange will find this news story useful.