நிறை மாத கர்ப்பத்திலும் செம்ம டான்ஸ் ஆடிய நடிகை ஸ்ரேயா.. வைரலாகும் OLD THROWBACK வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் “உனக்கு 20 எனக்கு 18”  திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஸ்ரேயா

Advertising
>
Advertising

Also Read |"அனுபவத்துல சொல்றேன்..டாட்டூ மட்டும் போடாதீங்க" - நடிகை சமந்தா பரபர வீடியோ

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “சிவாஜி” படத்தில் நடித்ததன் மூலம் மிகப்பிரபலமானவர். கடைசியாக தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இவர் ராஜமௌலி இயக்கத்தில் RRR படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். கார்த்திக் நரேன் இயக்கத்தில் இவர் நடித்த நரகாசூரன் படம் வெளியீட்டிற்கு காத்திருக்கிறது.

இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரோ கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தனது கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வதை வாடிக்கையாக செய்து கொண்டிருப்பார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் நிலவிகிறது.

தனக்கு குழந்தை பிறந்துவிட்டதாக சில நாட்களுக்கு முன் ஸ்ரேயா இன்ஸ்டாகிராமில் அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். மேலும் குழந்தை 2020 ஆம் ஆண்டு லாக்டவுனில் பிறந்ததாகவும், தற்போது குழந்தைக்கு 2 வயது ஆகுவதாகவும் தெரிகிறது. இதனை முன்னிட்டு பழைய த்ரோபேக் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், நிறைமாத கர்ப்பத்தில் எடுத்த போட்டோ, வீடியோவை பகிர்ந்து கணவரை டேக் செய்துள்ளார். குழந்தை பிறக்கும் போது எடுத்த போட்டோவையும் வெளியிட்டுள்ளார். 

Also Read |  விக்ரம் நடிக்கும் "கோப்ரா" படத்தின் ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றிய பிரபல டிவி சேனல் நிறுவனம்

தொடர்புடைய இணைப்புகள்

Shriya Saran classic pregnancy dance goes Viral on social media

People looking for online information on ஸ்ரேயா, Shriya Saran, Shriya Saran pregnancy dance will find this news story useful.