மாலத்தீவு 5 STAR ஹோட்டலில் நடிகை ஸ்ரேயா.. ஒரு நாள் தங்குவதற்கான வாடகை மட்டும் இம்புட்டா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஸ்ரேயா சரண் தனது குடும்பத்துடன் மாலத்தீவில் தங்கியிருந்த ஹோட்டல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Shriya Saran at amilla maldives resort and residences
Advertising
>
Advertising

தமிழில் “உனக்கு 20 எனக்கு 18”  திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஸ்ரேயா. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “சிவாஜி” படத்தில் நடித்ததன் மூலம் மிகப் பிரபலமானவர்.

கடைசியாக தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இவர் ராஜமௌலி இயக்கத்தில் RRR படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.

Shriya Saran at amilla maldives resort and residences

நடிகை ஸ்ரேயா சரண் தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்த சுற்றுலா பயணத்தில் கணவர் ஆண்ட்ரோ கோஸ்சீவ் & குழந்தை ராதாவுடன் கடற்கரையில் விளையாடுவது & பிகினி உடையில் கடலில் நீச்சல் அடிப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். மேலும் மாலத்தீவு சுற்றுலா குறித்து வீடியோக்களையும் ஸ்ரேயா சமீபத்தில் வெளியிட்டு இருந்தார்.

மாலத்தீவில் Amilla Maldives Resort and Residences ஹோட்டலில் தங்கியிருந்தார். இந்த ஹோட்டலில் தங்க ஒரு நாள் வாடகை 70,000 முதல் 2,10,000 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. இந்த ஹோட்டல் Finolhas Baa Atoll தீவில் இந்த ஹோட்டல் அமைந்துள்ளது.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஸ்ரேயா நடித்த நரகாசூரன் படம் வெளியீட்டிற்கு காத்திருக்கிறது. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரோ கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஸ்ரேயா, தனது குழந்தை ராதா & கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வதை வாடிக்கையாக செய்து கொண்டிருப்பார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் நிலவுகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Shriya Saran at amilla maldives resort and residences

People looking for online information on Amilla maldives resort and residences, Shriya Saran will find this news story useful.